9 மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தல் - முடிந்தால் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலும் ஒரேநாளில்
ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கத்துடன் கடந்த காலங்களில் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் இந்த பாராம்பரியத்தினை மாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளிற்கான தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறும் முடிந்தால் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலையும் கூட ஒரே நாளில் நடத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி நாட்டின் பொதுச்சேவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment