வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை - 90 நாட்களுக்குள் 4 ஆவது முறையாக அவலம்
-Hafeez-
கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் 22 ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக கண்டி மாத்ளை பிரதான வீதியில் (ஏ- 09) உள்ள அக்குறணை நகரம் இரவுநேரம் வெள்ளத்தில் மூழ்கியது.
இரவு 11.30 அளவில் நகர வீதிகள் நீரிழ் மூழ்கின.
மூன்று மாதங்களுக்குள் நான்காவது முறையாகவும் அக்குறணை நகர் நீரில் மூழ்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018.09.29 ம் திகதி திகதி முதல் நேற்று வரை அக்குறணை நகரம் நான்கு முறை நீரிழ் மூழ்கி உள்ளது. 22ம் திகதி இரவு அக்குறணை நகர் நீரிழ் மூழ்கியதால் சுமார் 100 க்கும்மேற்பட்ட வர்த்தக விலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்கின்றது.
கண்டி யாழ்ப்பாணம் எ- 09 வீதியில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாகன போக்குவருத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
அக்குறணை நகர் ஊடாக ஓடும் சிற்றாருகள் இரண்டின் மூலம் நீர்பெருக்கு ஏற்பட்டதால் நகரின் கண்டி - மாத்தளை வீதியும், துனுவிலை வீதியும் நீரிழ் மூழ்கியன.
இவ்வாறு அடிக்கடி நீரிழ் மூழ்குவது வழமையாகி உள்ளதாகவும் இதன் மூலம் வர்த்தக நிலையங்களுக்கும் வீடுகள் சிலவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
REMOVE /BREAK All ILLEGAL construction of Akurana Town.
ReplyDelete