8 ஆண்டுகளில் முதல், அரபுத் தலைவர் சிரியாவுக்கு விஜயம்
சிரிய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் அரபுத் தலைவராக சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் டமஸ்கஸ் விமானநிலையத்தை வந்தடைந்த பஷீரை சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் வரவேற்றதாக சிரிய அரச செய்தி நிறுவனமான சானா குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்ற இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் பற்றியும் பல அரபு நாடுகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிரிய ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சூடான் ஜனாதிபதியை சிரியாவுக்கு அழைத்து வந்த ரஷ்ய ஜெட் ஒன்றுக்கு முன்னால் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் புகைப்படம் ஒன்றை சானா வெளியிட்டுள்ளது. பஷீரின் வருகைக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.
2011 ஆம் ஆண்டு சிரிய யுத்தம் ஆரம்பமான விரைவில் 22 உறுப்பு நாடுகள் கொண்ட அரபு லீக்கில் இருந்து சிரியா நீக்கப்பட்டதோடு சிரியா மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.
எனினும் அரபு நாடுகளுடன் சிரியா முக்கியத்துவம் வாய்ந்த புரிதலை எட்டியதாக அஸாத் கடந்த ஒக்டோபரில் குவைட் பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார்.
May Almighty Allah Guide B Asad to the right Path of Islam from Terror Sheiya Group.
ReplyDelete