சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு, புகழ்ந்து தள்ளும் 70 வயது பெண்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
மைதானம் ஒன்றில் நீண்டகாலமாக பணி செய்யும் வயோதிப பெண்ணொருவருக்கு சிகிச்சை ஒன்றுக்காக உதவி செய்ய சங்கக்கார முன்வந்துள்ளார்.
கொழும்பு NCC மைதானத்தின் புற் தரையை பராமரிக்கும் 70 வயதான மாக்ரட் என்ற பெண்ணின் கண்ணில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்ய சங்கக்கார உதவி முன்வந்துள்ளார்.
தான் கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்காரவிடம் கூறியதாகவும், அதற்கு தேவையான உதவிகளை தான் செய்வதாகவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டதாக மாக்ரட் குறிப்பிட்டுள்ளார்.
சங்கக்காரவை எனக்கு நன்கு தெரியும். நான் NCCயில் இருந்து விலகியதில் இருந்து பல வருடங்களின் பின்னர் அவரை சந்தேத்தேன். அவர் எனக்கு உதவுவதாக கூறினார். நான் அவருக்காக விகாரைகளில் பூஜைகள் நடத்தியுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நாலந்த, கண்டி தூய திருத்துவ கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாலந்தா மைதானத்தில் இன்று ஆரம்பமானது.
இதன்போது சங்கக்கார மைதானத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணுடன் சங்கக்கார கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
NCC மைதானத்தில் 13 ஆண்டுகளாக மாக்ரட் பணியாற்றியுள்ளார்.
பல வருடங்களின் பின்னர் சந்தித்த போதிலும் சங்கக்காரவின் அன்பான பேச்சு மற்றும் அவரது உதவி செய்யும் குணத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளன.
Post a Comment