இன்னும் 6 பேருக்கு, அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டுமாம்...!
தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 58 அமைச்சர்களைக் கொண்ட பெரிய அமைச்சரவையொன்று மஹிந்தவின் காலத்திலேயே காணப்பட்டது. நாம் சொல்கின்றோம் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல இடமளியுங்கள் என்று. அமைச்சர்களின் எண்ணிக்கை 35,36 ஐத் தாண்டினாலும் பிரச்சினையில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியான அதிகாரம் இருக்குமாயின் 30 அமைச்சர்கள் என்பது சரிதான். ஆனால் ஏனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் போது 30 அமைச்சர்கள் என்ற மட்டுபாடு கடினமானது என்றார்.
ரவீந்திர சமரவீர, சரத் பொன்சேகா, வசந்த சேனாநாயக்க, ரங்கே பண்டார, பௌசி, பியசேன கமகே இவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment