600 ஆண்டுகால, அய்யூபி பள்ளிவாசல் இடமாற்றம் - எப்படி மாற்றினார்கள் தெரியுமா..? (வீடியோ)
துருக்கியில் 15 ஆம் நூற்றாண்டு பள்ளிவாசல் ஒன்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கென உருவாக்கப்பட்ட இயந்திரம் ஒன்றின் மூலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்களால் பள்ளிவாசல்களின் சுவர்கள் அகற்றப்பட்டு தனித்தனியே கொண்டு செல்லப்பட்டதோடு கடைசியாக 2,500 தொன் அய்யூபி பள்ளிவாசல் பண்டைய நகரான ஹசன்கைபில் இருந்து வெளியேற்றப்பட்டது.
300க்கும் அதிகமான சக்கரங்கள் கொண்ட பாரிய இயந்திரம் ஒன்றில் மூலமே, இந்த பள்ளிவாசல் ஒரு மைல் தூரம் கொண்டு செல்லப்பட்டது.
துருக்கின் நான்காவது மிகப்பெரிய அணையான இலிசு அணை பண்டைய நகரான ஹசன்கைபுடன் இணைக்கப்படுவதை ஒட்டியே இந்த பள்ளிவாசல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
610 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளிவாசல் தவிர அந்த நகரில் உள்ள ஏனைய பண்டைய பொக்கிஷங்களும் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ
Post a Comment