மஹிந்த 54 பேருடன் பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும், சு.க.க்கு துரோகம் இழைக்கவில்லை
மஹிந்த ராஜபக்ஷ 54 பேருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆனால் சுதந்திர கட்சி உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, ஜோன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டார உள்ளிட்ட மூவரும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து கட்சிக்கு துரோகமிழைத்து விட்டனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது உறுதியாகும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் றோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
சுதந்திர கட்சியிலிருந்து விலகாமல் ஐ.தே.க அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக விஜித் விஜயமுனி சொய்சா, செனவிரத்ன மற்றும் இந்திக பண்டார ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் சு.கவின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியை நாம் எப்போதும் சுதந்திர கட்சிக்கு எதிரான கட்சியாகவே கருதுகின்றோம். அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாமையினாலேயே தேசிய அரசாங்கத்திலிருந்து விலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். இந்நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மூவரும் அவர்களுடன் இணைந்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததாகும்
Post a Comment