Header Ads



48 மணிநேரத்துக்குள் முக்கிய சதித்திட்டத்தை வெளியிடவுள்ள நாமல் குமார

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்றும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

மதஸ்தலம் ஒன்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவிருந்த குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான தகவல் இந்த குரல்பதிவு மூலம் உறுதியாவதாகவும் இந்த சதித்திட்டம் 150 இலட்சங்களுக்கு முன்னெடுக்கப்படவிருந்ததாகவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அவர் தற்போது அரசியலுடன் தொடர்புபட்டுள்ளாரென்றும் இதற்கமைய இன்னும் 48 மணி நேரத்துக்குள் இந்த சதி முயற்சி குறித்த தகவலை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நாட்டை சீரழித்துக்கொண்டு சிங்கள முஸ்லிம் கலவரங்களை தூண்டுவது தமிழ் பயங்கரவாதம் என்று தெரிந்தும். முஸ்லீம் அமைச்சர்கள் மெளணம் காப்பதின் மர்மம் என்ன? தங்களுக்கு நீதிவேண்டுமென்று ஐநாவில் வருடாவருடம் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு உலகை ஏமாற்றிக்கொண்டு இன்னொரு சிறுபான்மை இனத்தை அழிக்க சகல சூழ்ச்சி திட்டங்களையும் தீட்டும் தமிழ் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை உலகிற்கு தெரியபடுத்த முஸ்லிம்கள் வக்கற்றவர்களாகவே இருக்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை பிடித்த மிகப்பெரிய சாபக்கேடுகள். தமிழ் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் முஸ்லிம்களையும் பாதுகாத்த மஹிந்த அவர்களை சர்வாதிகாரியென்று விமர்சிக்க என்ன முஸ்லிம் அரசியல்வாதிக்கும் அருகதையில்லை

    ReplyDelete
  2. இவர் சொல்லுவது மட்டும் சரியென்றால் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டும் பாதுகாப்பு துறை சும்மாவா இருக்கின்றார்கள்?அவ்வாறு இல்லாமல் இந்த தனிநபருக்கு தலைசரியில்லையா என்ன சரி ஒன்றை நாள்தோறும் சொல்லி மக்களை அவலத்துக்கு இட்டுசெல்லுறான்.

    ReplyDelete

Powered by Blogger.