Header Ads



இன்று 4 மணிக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க, முழு உலகமும் எதிர்பார்க்கும் தீர்ப்பு

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட உள்ளது. 

இன்று (13) மாலை 4 மணிக்கு குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. 

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தன. 

வரலாற்று சிறப்பு மிக்க வழக்கின் தீர்ப்புக்காக அமைய உள்ள குறித்த தீர்ப்பிற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.