மைத்திரியின் மன நிலையை பரிசோதிக்குமாறு, கோரப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 விடயங்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மன நிலையை பரிசோதனை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று -10- வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு தக்ஷிலா லக்மாலி என்ற பெண்ணால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியமைப்பிற்கு அமைய இந்த மனு தாக்கல் செய்ய முடியும் என சட்டத்தரணி சிசிரகுமார சிறிவர்தன தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பிற்கு அமைய ஒரு இடத்தில் பணி செய்யும் ஒருவர் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அவரை பணியில் இருந்து நீக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டு மக்களின் பெரும்பான்மையோருக்கு மைத்திரி மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என விடயம் தற்போதைய பிரச்சினைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இதனால் தற்போதுள்ள விடயங்களுக்கமைய ஜனாதிபதி மன ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயற்படுகின்றார்.
அதற்கு 3 காரணங்கள் உள்ளது. ஒரு கிராம பகுதியில் இருந்து ஜனாதிபதி என்ற பதவி கிடைத்ததனை அவரால் நினைத்து பார்க்க முடியாமை, அடுத்து அவருக்கு நாள்பட்ட ஒரு வகையான மனநோய் உள்ளதாக அவரது மகள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மற்றையது அவருக்கு மிக அருகில் இருந்த அதிகாரி கப்பமாக 20 மில்லியன் ரூபா பெற்று கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியாக இருந்திக்கலாம்.
இவ்வாறான தொடர் சம்பவங்கள் காரணமாக ஜனாதிபதிக்கு மனரீதியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு மனநோய் தொடர்பான சோதனை நடத்தி அறிக்கை வழங்குமாறு அவரது மனுவில் கோரியுள்ளார்.
சரியான கல்வியறிவற்ற கிழவன்களை தலைவர் பதவிக்கு தெரிவு செய்தால் இது தான் கதை.
ReplyDelete