Header Ads



30 அமைச்சு செயலாளர்களுள், ஒரேயொரு முஸ்லிம்

புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (21) மாலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் 30 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு திருமதி எஸ்.எம். முஹம்மத் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது. சகல அமைச்சுக்களின் செயற்பாடுகளும் ஜனாதிபதியினூடாக இடம்பெறச் செய்வதற்கே இந்த ஏற்பாடாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகின்றது.

சகல அமைச்சுக்களுக்கும் நேரடியாக செயலாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார். செயலாளர்களின் இறுதி ஒப்பத்துடனேயே அமைச்சுக்களின் அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

dc

5 comments:

  1. ஒரே ஒரு முஸ்மில் என்று தலைப்பு இட்டு இருப்பது பொருத்தம் இல்லை என்று நான் நினைக்கிறன். என்னுடைய கண்ணோட்டத்தில் இது இனவாதம் ஆகும். யார் மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை.சொல்லுவதட்கு என்னை மன்னியுங்கள், அதிகமான முஸ்லீம் சகோதரர்களது பதிவுகள் இனவாத கருத்துக்களாகவே பதிய படுகின்றன. ஒரு முஸ்லீம் முழு மனித சமூகத்தடுக்கும் நன்மை பயக்க கூடியவன், அதை தன இஸ்லாம் சொல்லுகிறது, நபியவர்கள் செய்து கட்டினார்கள்.

    யார் பதவிக்கு வந்தாலும் பரவாயில்லை அவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய கூடியவர்களாகவும் நீதியாக நடக்க கூடியவர்களாக இருத்தலே முக்கியமானது. அவர் முல்ஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல , எல்லா மக்களுக்கும் நன்மை செய்ய கூடியவராக இருத்தல் வெண்டும், மனிதர்கள் மட்டும் அல்ல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த இயற்கை வளங்களுக்கும் சுற்று சூழலுக்கும் நண்மை செய்ப்பவராக இருக்க வேண்டும். இதட்கு அவர் முஸ்லிமாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அவர் எந்த மதத்தவர் ஆக இருந்தாலும் அவர் நல்ல மனிதராகவும் தகுதியானவராகவும் இருந்தால் போதும்.

    ReplyDelete
  2. Mr. Mohamef yasar perfect correct

    ReplyDelete
  3. அருமையாக சொன்னீர்கள் தோழர் மொஹமட் யாசீர் அவர்களே.

    ReplyDelete
  4. ரணிலையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பாதுகாத்த முஸ்லீம் அரசியல் போராளிகள் இயலுமானால் ஜனநாயக முறைப்படி இன்னும் இரண்டு முஸ்லீம்களை அமைச்சின் செயலாளராக நியமித்து காட்டுங்கள் .அப்படி நியமிக்காவிட்டால் அதட்காக நீதிமன்றம் செல்லுங்கள் .

    ReplyDelete
  5. முகம்மட் யாசீர் அவர்களின் கருத்து
    மிகவும் வரவேற்கத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.