Header Ads



பொலிஸார் 2 பேர் சுட்டுக்கொலை - வெளியான புதிய தகவல்கள்

வவுணதீவில் பொலிஸார் கொலையுடன் தொடர்புபட்டவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை  சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவர் மாவீர்தின நிகழ்வுகளிற்காக மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ

மட்டக்களப்பில் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜநாயகம் சர்வானந்தம்  என்ற 48 வயது முன்னாள் போரளியொருவர் இந்த சம்பவம் தொடர்பில் வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி விசாரணைகளிற்காக மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவர் பிரபாகரன் அஜந்தன் என பெயர்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் பிரபாகரன் அம்பாறை தம்புலுவிலை சேர்ந்தவர்; என தகவல்கள் வெளியாகியுள்ளன

தாண்டியடியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றன என காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கிய தாண்டியடி என்ற பகுதியில் விசேட அதிரடி படையினரின் முகாம் அமைந்திருந்ததால் பொது மக்கள் மாவீரர் நாளை கொண்டாட முடியாத நிலைகாணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தேசத்தின் வேர்கள் என்ற அமைப்பு இந்த வருட மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்தது என தெரிவித்துள்ள காவல்துறையினர்  கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் இந்த அமைப்பின் தலைவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்கள் மாவீரர் நாள் நினைவுகளிற்கான நிதியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் மாவீரர் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் காவல்துறையினருக்கும்  நிகழ்வை ஏற்பாடு செய்த சிலரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்

இதேவேளை வட்டக்கச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நவம்பர் 26 ம் திகதி தாண்டியடிக்கு சென்று மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் தங்கியிருந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

6 comments:

  1. முஸ்லிம்களையும் சிங்களவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்த தமிழ் பயங்கரவாதம் இன்று வசமாக மாட்டிக்கொண்டுள்ளது

    ReplyDelete
  2. there are many information circulating that bloddy Karuna is regrouping to fight again, he is the culprit for this incident

    ReplyDelete
  3. WHERE IS ANTONRAJ THE WOLF FOR COMMENTS?

    ReplyDelete
  4. இறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எனது அஞ்சலிகள். யார் இதனை செய்திருக்கக்கூடுமென்பதில் எதிர்பாராத புதிய தகவல்கள் வெளிவரக்கூடும். அரசியல் பார்வைவில் அரசியல் அமைப்புக்கு எதிரானதரான சதி ஆட்ச்சியை தொடர மகிந்தவுக்கு இத்தகைய வன்முறைகள் உதவக்கூடும். அந்த வகையில்தான் கருணா போன்ற ஆய்த வல்லமை கொண்ட கிழக்கு மாகாண பிரமுகர்களுள் ஒருவரான கருணாமீது குற்றம் சுமத்தப்படுகிறது. இப்பகுதி மாட்ட்டுக் கள்ளருக்கும் பொலிசாருக்கும் மோதல் உள்ள பகுதியென்பதையும் மறந்துவிட முடியாது. இவை ஆராயப்பட வேண்டும். தமிழ் குழுக்கள் சம்பந்த பட்டிருந்தால் இது அடிபடையில் கிழக்கு மாகான தமிழர்களை பலிக் கடாவாக்கும் கண்டிக்க வேண்டிய பயங்கரமாகும். இந்த மூன்று கோணத்திலும் இப்பிரச்சினை புலன் ஆய்வு செய்யப்பட வேண்டும்

    ReplyDelete
  5. HOPE innocent public (regardless of race) will be safe from this kind of incidents.

    ReplyDelete
  6. புலிகளின் ஆயுதங்கள் 2 முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தற்போது இருப்பதையும் விசாரணையாளர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.