19 க்கு பலத்த கிராக்கி, நாடு முழுவதும் தட்டுப்பாடு, கிராமங்களில் இருந்துகூட வந்து வாங்கும் நிலைமை
அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட அரசியலமைப்புக் குழப்பங்களை அடுத்து, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது.
இந்த நிலையிலேயே அரசாங்க வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரதிகளுக்கு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு திடீர் கேள்வி எழுந்தது.
காலியில் உள்ள அரசாங்க வெளியீட்டுத் திணைக்களத்தின் கிளையில் உள்ள 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
சட்டவாளர்கள், மாணவர்கள், பிக்குகள், அரசியல்வாதிகள், வல்லுனர்கள் பலரும் இவற்றை வாங்கிச் சென்றதாக, விற்பனைப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
கிராமப் புறங்களில் இருந்து கூட பலரும் வந்து வாங்கிச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவற்றை மீண்டும் அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
19 - constitution இல்லை. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் கண் பிதுங்க வைத்த Constipation
ReplyDeleteThatpothu appadi adukkalaam
ReplyDelete