Header Ads



11 வருடக் கல்வியும், டிசம்பர் 12 ஆம் திகதியும் (அன்பார்ந்த பெற்றோர்களே, இது உங்களின் கவனத்திற்கு)

அடைபட்டு, அடிபட்டு, ஆசான் முன் தலைகுணிந்து பாரினிலே சிறப்பாய் வாழ பாடசாலையிலே பக்குவமாய் வளர்க்கப்பட்ட உங்கள் பிள்ளைகள்...

பெற்ற பிள்ளை, எதிர்காலத்தில் எனக்கு உதவும் பிள்ளை, பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் பிள்ளை என பொத்திப் பொத்தி வளர்த்த உங்கள் பிள்ளைகள்...

ஒன்பது பாடங்களை ஓயாமல் பதினொரு வருடங்கள் படித்துப் படித்து வெறும் மும்மூன்று மணித்தியாலங்களில் பரீட்சையை மூச்சுப் பிடித்து எழுதி விட்டார்கள்.

அடைபட்டு அடிபட்டு தினந்தோரும் அறிவுறைகளை காதுகளுக்குள் உள்வாங்கி உள்வாங்கி சலித்துப் போன உங்கள் பிள்ளை, நாளைக்குத்தான் நமக்கு நிம்மதி என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலையில் உள்ள பாரம் குறைந்து விட்டது என பறக்க நினைப்பார்கள்.

பரீட்சை முடிந்ததும் பிறர்மேல் நீலச்சாயம் தெளிக்க நினைத்துக் கொண்டிருப்பார்கள். முட்டைகளை வீசியடிக்க முயற்சி செய்வார்கள். பாதையில் கும்மாளமிட்டு கூத்துப் போட குழு சேர்ப்பார்கள். இவ்வாறான வீண் கலாசாரங்களால் பிறரின் தீண்டலுக்கும் உள்வாங்கப்படுவார்கள்.

அன்பார்ந்த பெற்றோர்களே!

பெற்றோரால், ஆசிரியர்களால் பக்குவமாக பதினொரு வருடங்கள் வளர்க்கப்பட்ட  கலாசாரம் ஒரேநாளில் சீரழிய விட்டுவிடாதீர்கள்.

இன்று  டிசம்பர் பன்னிரண்டாம் திகதி பரீட்சை முடிவடைய பத்து நிமிடங்கள் முன்பே பாடசாலை செல்லுங்கள்.

பழகியவர்களோடு விடைபெற உங்கள் முன்னிலையில் சந்தர்ப்பம் கொடுங்கள். பக்குவமாய் உங்கள் பிள்ளையை நீங்களே அழைத்துச் செல்லுங்கள்.

தலையில் சுமந்த பாரத்தை தாளிலே இறக்கி விட்டார்கள்.  மனது சுகமடைய குடும்பத்தோடு சுற்றுப் பயணம் கூட்டிச் செல்லுங்கள்.  உறவினர் வீடுகள் அழைத்துச் சென்று உறவுகளை மீட்டச் செய்யுங்கள்.

அன்பார்ந்த பெற்றோர்களே!

தினந்தோரும் அடைபட்டு, அடிகள் பட்டு, ஏச்சப் பேச்சுக்கள் வாங்கி, எல்லைக்குள்  பழக்கப்பட்ட பிள்ளை பரீட்சைப் பெறுபேறு வரும் வரைக்கும் முழுமையாக உங்கள் கைகளிலேயே......

N.m

No comments

Powered by Blogger.