10 மாதங்களுக்கு ஜனாதிபதியுடன், இணைந்துதான் பயணிக்கவேண்டும் - சஜித்
நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்துதான் இந்த பத்து மாதங்களும் பயணிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கொலன்னாவைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர்,
விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு இனியும் பயணிக்முடியாது. 10 மாதங்களுக்கு நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடன் இணைந்துதான் பயணிக்கவேண்டும்.
எஞ்சியுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும்.
நாட்டைக்கட்டியெழுப்பும் வகையில் தீர்மானம் எடுக்கப்படவேண்டும். மக்களுக்காகவே அரச இயந்திரம் செயற்படவேண்டும்.
எனினும், மக்களுக்கு சேவையாற்ற முடியாமல்போனால், அனைத்தையும் தூக்கிவீசிவிட்டு வீட்டுக்குச்செல்வேன் என்றார்.
Post a Comment