Header Ads



கொழும்பில் வந்திறங்கிய 1000 ரஷ்யப் படையினர் - அதிநவீன போர்க் கப்பல்களும் வருகை


சுமார் ஆயிரம் ரஷ்ய கடற்படையினருடன், ரஷ்ய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பல்களைக் கொண்ட அணியொன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாகவே ரஷ்ய கடற்படையின் வர்யாக், அட்மிரல் பன்ரெலேவ், பொறிஸ் புரோமா ஆகியன சிறிலங்கா வந்துள்ளன.

இவற்றில், 187 மீற்றர் நீளமான வர்யாக் என்ற அதி நவீன ஏவுகணைப் போர்க்கப்பலில் 529 கடற்படையினரும்,  162.8 மீற்றர் நீளம் கொண்ட அட்மிரல் பன்ரெலேவ் என்ற போர்க்கப்பலில், 388 கடற்படையினரும், 161 மீற்றர் நீளமான பொறிஜஸ் புரோமா என்ற விநியோகக் கப்பலில் 75 கடற்படையினரும் பணியாற்றுகின்றனர்.

இந்த ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் அணிக்கு, றியர் அட்மிரல்ட எடுவேட் மிகெய்லோவ் தலைமையேற்று வந்துள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் நாள் இந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன.

No comments

Powered by Blogger.