Header Ads



அரசாங்கம் இலஞ்சம் வழங்குகிறது - TNA குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது.

இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாகக் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து, நாடாளுமன்ற பெரும்பான்மையை கபடமாகப் பெறுவதற்கு புதிய அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,  இந்த ஜனநாயக விரோத செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு, தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்தச் சதி முயற்சிக்குப் பலியானதை குறித்து, தமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுவதாகவும் அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை, உடனடியாக எடுக்கப்படுமென்றும் த.தே.கூ தெரிவித்துள்ளது.

1 comment:

  1. இவர்களின் போலி தேசியம் காலத்திற்கு காலம் வெளிப்பட்டுகொண்டே இருக்கின்றது. அன்று பணத்திற்கும், பெண்ணிற்கும் ஆசைப்பட்டு கருணா போலி தேசியத்தை தூக்கியெறிந்தான். இன்று இவன் பணத்திற்கும், அமைச்சு பதவியிற்காகவும் தூக்கி எரிந்துவிட்டான். நாளை 100 கோடி கொடுத்தால் சம்பதனும் ராஜபக்சவோடு இனைந்துவிடுவார். குறித்து வைத்துக்கொள்ளுங்கள் மிஞ்சிப்போனால் இன்னும் 3 வருடங்களில் இலங்கையிலிரும் தமிழ் தேசியம் மறைந்துவிடும்

    ReplyDelete

Powered by Blogger.