எமது Mp களை பலவந்தமாக, உட்படுத்திக்கொள்ள வேண்டாம் - ஜனாதிபதியிடம் ரிஷாத்
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகத்தை அழிப்பதற்கு துணைபோகக் கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாகவுள்ளது. இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
நாட்டின் அரசியலில் உருவாகியுள்ள ஸ்திரமற்றத் தன்மை தொடர்பில் வினவியபோதே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
நாட்டின் அரசியலில் ஸ்திரத்தன்மையை ஜனநாயக ரீதியில் நிலை நிறுத்துமாறும் நாட்டில் சுமுக நிலைமையினை உருவாக்கி மக்களின் சகவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமாறும் ஜனாதிபதியைக் கோரியிருக்கிறோம்.
வரலாற்று சிறப்புமிக்க எமது நாட்டின் ஜனநாயகத்தை வெல்ல வேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எமது உறுப்பினர்களை பலவந்தமாக உட்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதியைக் கோரியுள்ளோம் என்றார்.
Fareel
Fareel
Post a Comment