ரணிலுக்கு எதிராக FCID யில், பொதுபல சேனா முறைப்பாடு
ஒரு வாரத்துக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச சொத்தை முறைக்கேடாக பயன்படுத்துவதாகவும் என்றும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அதன் உறுப்பினர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமையில் பிரித்தானியாவின் தலையீடு அநாவசியமானது என்று தெரிவித்து, பொதுபல சேனா அமைப்பு இன்று -02- முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்ற பொதுபலசேனாவின் பிரதிநிதிகள், இந்த மனுவை கையளித்ததாக, அதன் உறுப்பினர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவே இன்னும் இலங்கையின் பிரதமராக பிரித்தானியா அங்கீகரிக்கும் என்று அண்மையில் அந்த நாட்டின் நாடளுமன்றில், உள்துறை செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே பொதுபலசேனா அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறது.
Post a Comment