சர்ச்சைக்குரிய மகிந்த, மாலைதீவு பறக்கிறார் - மோடி கை கொடுப்பாரா..?
மாலைதீவில் அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்வில், சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாக, சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் நாள் சிறிலங்கா பிரதமராக பதவியேற்பதற்கு முன்னரே, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது அவர் சிறிலங்கா பிரதமர் என்ற வகையில், இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்வு வரும் 17ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்சவை, இன்னமும், சீனா தவிர்ந்த உலகின் வேறெந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment