Header Ads



மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது, எமக்கு பாதிப்பு - ரவூப் ஹக்கீம்


புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினையை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள், இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொண்டு, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வுகாண முடியாது. உரிய முறையில் நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே சரியான தீர்வை காணலாம். 

புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே கட்சி தொடர்ந்து இருந்துவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், அவருடன் மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது. 

அத்துடன் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

8 comments:

  1. Oh Muslim People.. Any Dangerous situation could happen at this time... We Don't have any Muslim representatives/Political leaders in our country at this time.
    By the name of Ummra these Muslim leaders are going/jumping out of country. Only God Know the intention.. I think its not a good sign... think.

    ReplyDelete
  2. Oh ungal kattchikku paadippai eattpadutthum?....appo muslim samooham padikka pattal paravaellai appaditthane? Sariyana suyanala vadihal

    ReplyDelete
  3. தற்போது நீங்கள் அனைவரும் உலகப்பற்று இல்லாதவர்கள் போல் காட்சி அளிக்கிண்றீர்கள் .இவ்வாறு நீங்கள் தொடர்ந்தும் எந்த ஆட்சியிலும் சுகபோகங்கங்களுக்கு ஆசைப்படாதவர்களாக இருந்தால் அணைத்து சகோதர இனத்தவர்களும் இஸ்லாத்தை நோக்கி கவரப்படுவார்கள் .ஆனால் நீங்கள் உங்கள் உறுப்பினர்களை பாதுகாப்பதட்கு உம்ரா செல்வது போன்று முஸ்லீம் சமூகத்தை பாதுகாப்பதட்கோ அவர்களின் கல்வி ,பொருளாதார மேம்பாட்டை மேட்கொள்வதட்கோ எந்த திட்டமும் உங்களிடம் இல்லை .

    ReplyDelete
  4. இஃறாம் உடையுடன் சொல்லப்பட்ட வார்த்தைகள்!!!!!

    உண்மை என்று நம்புவோம். இதற்குப்பிறகும் பல்டி அடித்தால் ...............

    ReplyDelete
  5. எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. MUSLIMS SHOULD DENOUNCE RAUF HAKEEM’S AND OTHER MUSLIM POLITICIANS CALLS TO MUSLIMS TO OPPOSE MR/MY3 NEW GOVERNMENT.

    Let's look at the reality. Whatever said and done - the Mahinda -MY3 political steam roller is moving forward. The 72% Sinhala people will finally support Mahinda, including the Police and the 3 Security Forces. That is the powerful political force needed to safeguard our “MAATHRUBOOMIYA” from the crutches of the Western powers that are trying to make us their slaves economically and destroy our SOVEREIGNTY as an independent FREE STATE of the UN and a member of the COMMONWEALTH FAMILY, in the international political arena. tHE attitude of the UNF/UNP in the handling of all state and public matters and the economy of the country and the UNF/UNP political and hierarchical system of the big wigs of the UNP, since January 8th, 2015, involved in mega corruption with their minority coalition partners, which has resulted in the pathetic state of affairs in our country and the selling of our country’s assets to the political vultures of the eastern and western world.
    The BURDEN has befallen our poor citizens and the nation to redeem them for our next generations which cannot continue. Though the Muslim political leaders may say they are supporting Ranil, they will finally crawl towards Mahinda and Maithri (MY3) on their return from Umrah (Mecca).
    Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa.
    The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS".
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any other, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  7. jananaayatthuku muranaana seyalukku udanpattaal ithu ponru nam pillayhain kaalatthilum nadakkamal irukkum enru enna nicchayam...ungalin mudiway naan wara wetkinren

    ReplyDelete
  8. All the best.dont blame our muslim leader.they will do good job for our society.

    ReplyDelete

Powered by Blogger.