Header Ads



கட்டார் நாட்டுக்காக உளவு பார்த்த, பஹ்ரைன் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை

பஹ்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேய்க் அலி சல்மான், கட்டார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

சல்மான் மீது எதிரி நாட்டுடன் கூட்டுச் சேர்ந்ததாக பஹ்ரைன் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டி ஒருசில மாதங்களிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் 2017 ஆம் ஆண்டு கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்டது.

பஹ்ரைன் தொடர்ச்சியாக எதிர்ப்பாளர்கள் மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டிருப்பதற்கு மத்தியில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு நீதியை பரிகசிப்பது என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் அல் வெபக் அமைப்பின் தலைவரான அலி சல்மான் கட்டாருடன் இணைந்து 2011இல் அரச எதிர்ப்பு பதற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இவருடன் இந்த குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்த எதிர்க்கட்சி தலைவர்களான ஹசன் சுல்தான் மற்றும் அலி அல் அஸ்வாத் ஆகியோர் மீதும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனின் பெரும்பான்மை ஷியாக்களினால் 2011 பெப்ரவரியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அதிக ஜனநாயக உரிமைகளை கோரியிருந்தனர். எனினும் அண்டை நாடான சவூதி அரேபியாவுடன் இணைந்த ஆளும் சுன்னி அரச குடும்பம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கியது.

No comments

Powered by Blogger.