பிரித்தானியாவை மிரட்டுகிறது, சிங்கள ராவய
பிரித்தானியாவின் அதிகாரத்திற்கு கட்பட்டு செயற்படுவதற்கு இலங்கை அந்நாட்டின் காலனித்துவ நாடு அல்ல. மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையிடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மீறி தலையிடும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு அடுத்த கட்டடத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பான விடயங்களில் பிரித்தானிய தலையிட்டு வருகின்ற நிலையில் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலாயத்தில் கடிதமொன்றினை கையளித்திருந்தது.
கடிதத்தை கையளித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல கந்தே சுதந்த தேரர்,
இலங்கை பிரித்தானியாவின் கீழ் செயற்படும் காலனித்துவ நாடு அல்ல. இது சுயாதீனமாக செயற்படுமொரு நாடாகும். எனவே இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு பிரித்தானியாவுக்கு அதிகாரம் கிடையாது. இவ்வாறு அதிகாரத்தை பிரயோகிக்க முற்பட்டால் வீண் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
Post a Comment