Header Ads



ஹக்கீமும், றிஷாத்தும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்

-நவமணி- 

உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தின் செயற்பாடு குறித்து முழு நாடும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. 

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேரது முடிவு, இந்த நெருக்கடியில், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியில் முக்கியமாகவும் தீர்மானம் மிக்கதாகவும் அமையப்போகின்றது.  அதனால் தான் முழு நாடும் இந்த இரு கட்சிகளது செயற்பாட்டை கூர்மையாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. 

இதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்து அதன் தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்மாயில் கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் தெரியாமல். அரசு அணிக்கு தாவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.  கலாநிதி இஸ்மாயிலின் இந்த செயற்பாடு துரோகத்தனமானது என வர்ணித்து சமூக ஊடகங்கள் பதிவுகளை இட்டு வருகின்றன. அக்கட்சித் தலைவர் றிஷாத் பதியுதீனின் தலையீட்டினால் இந்த கட்சித் தாவல் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதேநேரம் இரு கட்சிகளிலிருந்தும் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பலத்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவது உண்மை. இந்த அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதும் இலகுவானதல்ல. 

இங்கே நாம் ஒன்றை வலியுறுத்திக்கூற விரும்புவது எந்த ஒரு முடிவினை எடுத்தாலும் இரு கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்பதனையே.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கொள்கையில் வேறுபட்ட கட்சிகளல்ல. தாய்க்கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் ஒரு கட்சியே மக்கள் காங்கிரஸாகும். இரு கட்சிகளது பிரதான இலக்கு முஸ்லிம் சமூகத்தின் சுபீட்சமான எதிர்காலமாகும். 

இரு கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்து செயற்படுவதற்கு தீர்மானித்திருப்பது சமூகத்தின் பலத்த திருப்திக்குள்ளாகியுள்ளது. சமூகம் இதனையே விரும்புகின்றது. 

ஐ.தே.க தலைவர் ரணிலை ஆதரிப்பதாக இருப்பதாலும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக இருந்தாலும் இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவதே சிறந்தது. 

இரு கட்சியிலுமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவது மிக அவசியமானதாகும். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தையில் விலை பேசப்படுகிறார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இந்த விலை பேசல்களுக்குள் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்கக்கூடாது. 

பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை 
நீக்கியது அரசியல் யாப்புக்கு இணங்கியது என்று கூறப்பட்டது ஒழுக்கத்துக்கு முரண்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  இந்த நிலையிலே இரு கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென முடிவெடுத்துள்ளது. இதுவே சரியான முடிவு என சமூகம் கூறுகின்றது. 

என்றாலும் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தான் சமூகத்தின் எதிர்கால இருப்பிற்கு பாதுகாப்பு என இரு கட்சித் தலைவர்களும் மற்றும் எம்.பிக்களும் கருதினால் அதனை பகிரங்கமாக அறிவித்து தீர்மானம் எடுப்பதே சிறந்தது. 

இந்த விடயத்தில் ஒழிவு மறைவின்றி இரு முஸ்லிம் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வருவதே சமூகத்துக்கு ஆரோக்கியம் மிக்கதாக அமையும்.


3 comments:

  1. SRI LANKA MUSLIMS SHOULD FORM A NEW POLITICAL PARTY JOINING THE SLMC SUPPORTERS/VOTERS (PORAALIGAL AND PAMARAMAKKAL) AND SUPPORTERS OF THE ACMC. The NEW POLITICAL PARTY has to emerge from within the Sri Lanka Muslim Community and should be the FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the new government of PM Mahinda Rajapaksa or any governments that will be formed in the future, Insha Allah. “The Muslim Voice” is willing to join any person, group, Muslim organization or jamath who will be honest and sincere that will produce "CLEAN" and diligent (“non-munaafikk”) representation and leadership for the Muslims in the future, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. ரணிலை இனியும் நம்பிப் பயனில்லை. நல்லதோ, கெட்டதோ, அதனை செய்வதற்கு முதலில் முதுகெலும்பு அவசியம். ரணிலுக்கு அது இல்லை.

    ReplyDelete
  3. We dont support ranil.we support for democracy.MR became prim minister by unofficial way.
    MR ranil both same for us.ranil became old.he dont have a chance to run this country.better to quit from leader ship

    ReplyDelete

Powered by Blogger.