கட்சி தலைமைத்துவம் தொடர்பில் ஐ.தே.க.க்குள் குழப்பநிலை
பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐ.தே.கவின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட வேண்டுமென ஒரு சாரார் வலியுறுத்திவரும் நிலையில் தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அக்கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
இருவேறுபட்ட கருத்துக்களால் கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.தே.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், ஹிருனிகா பிரேமச்சந்திர, நளின்பண்டார ஜயமகா போன்றவர்கள் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியமை குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக எஸ்.எம்.மரிக்கார் மற்றும் ஹிருனிகா ஆகியோர் சஜித் பிரேமதாசவின் பெயரைக் குறிப்பிட்டு அவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டும் எனப் பகிரங்கமாகக் கூறியிருந்தனர். கடந்த 24 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளார். தற்பொழுது கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
தொடர்ந்தும் தோல்வியடைந்து எதிர்க்கட்சியில் இருப்பதாயின் மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல் இருக்க முடியும் என்பது தனது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் உலகத்தில் தலைமைத்துவங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்படும் உலகத்துடனேயே நாம் முன்னேறிச்செல்ல வேண்டும். மூன்றரை வருடத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், சீரழிந்துபோயுள்ள அரசியல் களத்தைப் புதிப்பிப்பதற்கும் புதிய தலைமைகள் அவசியம் எனவும் மரிக்கார் கூறினார்.
அதேநேரம், கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாச ஏற்பதே பொருத்தமானது. இது விடயத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஹிருனிகா பிரேமச்சந்திர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இருந்தபோதும் கட்சித் தலைமைத்துவத்திலோ அல்லது அடுத்த பிரதமர் வேட்பாளர் பதவியிலோ எந்தவிதமாற்றமும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் இருப்பார் என ஐ.தே.கவின் செயலாளர் நாயகம் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்து கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரியவருகிறது.
இது இவ்விதமிருக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஒருவரை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது பற்றியும் ஐ.தே.க ஆராய்ந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை களமிறக்குவது பற்றி சிலர் ஆலோசனை முன்வைத்திருப்பதாகவும், இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளையோருக்கு வழிவிடவேண்டும்
கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அப்பதவியிலிருந்து விலகவேண்டுமென அக்கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் சுஜித் முத்துக்குமாரண தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சிக்காக பெரும் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ள கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கட்சியானது தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான பிரச்சினைகள் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் வந்துள்ளது.
பெரும் அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்பப்பட்ட ஐ.தே.கட்சி தற்போது வீழ்ச்சியை நோக்கி செல்வதை சகலரும் உணரவேண்டுமெனத் தெரிவித்த அவர் இச் சந்தர்ப்பத்தில் தலைமைத்துவம் மாறவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு தயவுசெய்து ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தை இளைய தலைவர்களிடம் வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்வரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாம் மட்டுமல்ல அவரோடு நெருக்கமாக செயலாற்றும் தலைவர்களும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான தீர்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
YOUR FIGHTING INSIDE THE PARTY
ReplyDeleteMR TOOK ADVANTAGE.IF RANIL NOT STEP DOWN UNP WILL GO TO HOME
LIKE SLFP PARTY.
ரணில் இறக்கும்வரை பதிவில் இருந்து விலகப் போவதில்லை, ரணிலுக்கு உள்ள ஒரே ஒரு பதவி அது மட்டும்தான்.
ReplyDelete