இலங்கைக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எச்சரிக்கை
இலங்கைக்கு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் இந்த நாட்டிற்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் இந்த எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இதுவரை அதற்கான எந்தவொரு சாதகமான சமிக்ஞையையும் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.
போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கத்தை தண்டிக்கும் வகையில் ஜிஎஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியது.
எனினும் கடந்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரிச்சலுகையை மீளப் பெற்றதுடன், ஏற்றுமதி வருமானத்தில் பெருமளவு முன்னேற்றத்தையும் கண்டது.
இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கணிசமான அளவு வளர்ச்சி கண்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் வரிச்சலுகை நிறுத்தப்படுமாயின் அது பாரியதொரு விளைவுகளை ஏற்படுத்தும் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment