மகிந்தவுடன் இணைப்பதற்காக, பேரம்பேசப்படும் குரல் பதிவு வெளியாகியது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, யோசித்த ராஜபக்சவின் பிரதிநிதி உட்பட பலர் தன்னை தொடர்புக்கொண்டு பேரம் பேசியதாகவும் அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் ரங்கே பண்டார வெளியிட்டுள்ளார்.
இந்த குரல் பதிவு jaffna muslim இணையத்திற்கும் கிடைக்கப்பெற்றது
களவு, பொய்,இலஞ்சம், இவகளை நம்நாட்டு ஜனாதிபதி மைதிரியும் அவனால் உருவாக்கப்கட்டுள்ள கள்ள பிரதமர் மஹிந்தவும் பகிரங்கமாக செய்கின்றார்கள் இதை எந்த சட்டமன்றத்தில் விசாரிப்பது? நகைப்புக்குறிய விடயம் என்னவெனில் மைதிரிபால இலஞ்ச ஊழல் விசாரனை பொலிசை உருவாக்கி ஏனையவர்களை விசாரனைக்கு உற்படுத்தியுள்ளான்!
ReplyDeletePlease Publish Entire Voice cut.
ReplyDelete