பிரான்ஸில் கை கால் இன்றி, கொத்து கொத்தாக குழந்தைகள் பிறப்பு - தேசிய விசாரணைக்கு உத்தரவு
பிரான்ஸில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸில் மூன்று இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.
சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் பிறப்புகள் தற்போது பதிவாகி உள்ளன. இதையடுத்து மீண்டும் இது குறித்து விசாரிக்க பிரான்ஸ் முடிவு எடுத்துள்ளது.
கர்ப்பத்தின்போது கருவின் வயிற்றுப்பகுதி, கைகள் சரியாக அமைய தவறியுள்ளது. இதில் முழு கைகள், முன்கைகள் அல்லது விரல்கள் இல்லாத நிலையில் குழந்தைகள் பிறந்திருக்கும் சம்பவங்கள் பதிவாளியுள்ளன.
Post a Comment