ஜனாதிபதியை சந்தித்தேன் - ஆனால் பல்டியடிக்க மாட்டேன் - ராஜித
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார்
இதன்போது பேசப்பட்ட விடயங்களை தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததாக ராஜித சேனாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவும் உடனிருந்தார்.
இதன்போது மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கிய விடயம் குறித்து ஜனாதிபதி தமக்கு விளக்கமளித்ததாக ராஜித கூறினார்.
எனினும் இந்த பதவியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தாம் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் பேசப்பட்ட விடயங்களின் பயனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்றும் ராஜித தெரிவித்தார். அத்துடன் கட்சி மாறல் விடயமாகவே தாம் ஜனாதிபதியை சந்தித்ததாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார்
Post a Comment