அமைச்சுப் பதவிகேட்டு வியாழேந்திரன், பல இடங்களுக்கு திரிந்தவர் - யோகேஸ்வரன்
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும், அவருக்கு அமைச்சுப் பதவி கேட்டு பல இடங்களில் திரிந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுமை தொடர்பில் இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியின் தலைமைப் பீடத்திற்கும் அறிவித்திருந்தோம், அதிலும் நாம் எச்சரிக்கையாகவும் இருந்தோம்.
ஆனால் அவர் திடீரென கனடா நாட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக அரசு பக்கம் சென்றுவிட்டார்.
இதுவரைகாலம், அவர் தமிழ் மக்களின் மீது கரிசனை கொண்டது போல், செயற்பட்டது, நடித்தது, அவருடைய போலியான முகாமாகும். அவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் கல்விப் பொறுப்பாளராக செயற்பட்டவர்.
தற்போது வாக்களித்த மக்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு என்னென்னவெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுவிட்டு சுக போக வாழ்க்கைக்காக போயிருக்கின்றார்.
மாவட்டத்தில் சில அரச அதிகாரிகள் இவ்வாறான அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் பதவி உயர்வு, போன்றவற்றிக்கு உதவும் என நினைக்கின்றார்கள்.
வியாழேந்திரன் புளொட் கட்சி சார்ந்தவராக இருந்தலும், எங்களது தமிழரசுக் கட்சியில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அவருடைய புளொட் கட்சி இவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக தற்போது அறிவித்திருக்கின்றது.
அதற்கிணங்க எமது தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் எமது கட்சியிலிருந்து நீக்குவதாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதத்தை அனுப்பி வைப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு கிடைக்காததால் "இந்தப்பழம் புளிக்கும்" என்கிறார்.
ReplyDeleteஎமதருமை அண்ணாச்சி வெள்ளியேந்திரன் பற்றி யோகேஸ்வரன் ஐயா பெரும் தமக்குள் ஏற்பட்ட பெரும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தூற்றியுள்ளதை நினைக்கும்தோறும் என் கண்கள் கலங்கா நிற்கின்றன. வெள்ளியேந்திரன் அண்ணாச்சி அவர்கள் தமது சொந்த இலாபங்களுக்காக மகிந்த அணியிருடன் கூட்டு சேரவில்லை என்பதனை யோகேஸ்வரன் ஐயா முதலில் அறிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக தம் மக்களின் நன்மை கருதியே சேர்ந்தார். ஏத்தனை நாளைக்குத்தான் மரக்கறி உணவையே சாப்பிட்டுக் கொண்டிருப்பது. ஏத்தனை நாளைக்குத்தான் கைத்தறி ஆடைகளையே அணிவது. ஏத்தனை நாளைக்குத்தான் தமிழுக்கு சேவை செய்கின்றேன் என்று மக்களுக்கு முன் நடிப்பது. ஏன் நாங்களும் கை கால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டாமா. மற்றவர்களைப்போல் குடும்ப குத்து விளக்குகளுடன் டாம்பீகமாக வீதி வலம் வர வேண்டாமா. சொல்லுங்கள் அன்பர்களே சொல்லுங்கள். யோகேஸ்வரன் ஐயா அவர்கள் ஒரு முழு சோம்பேறி;. என்னைப் பின்பற்றுங்கள். பயன் அடைவீர்கள். மக்கள் பற்றிய ஐயமே வேண்டாம். தேர்தல் வந்தால் நாய்க்கு எலும்புத் துண்டினை வீசுவதுபோல் வாங்கிய பணத்தில் கொஞ்சம் வீசி எறிந்தால் போதும். மக்கள் நம் பக்கம் வந்துவிடுவார்கள். அச்சம் தவிர். கொஞ்;ச காலத்திற்கு சுகமாக வாழலாம் என்ற புது மொழியை அறியாதவர்தான் இந்த யோகேஸ்வரன் ஐயா அவர்கள்.
ReplyDeleteசுமந்திரன் ஒன்றும் வாங்காமல் தான ரணிலுக்கு ஊழியம் செய்கின்றார் இவ்வளவு காலமும்?
ReplyDelete