Header Ads



இலங்கை அரசியல் நெருக்கடிகளும், சீனாவின் சதுரங்கமும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்-

முன்னைநாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழராலும் சிங்கள ஜனநாயக சக்திகளாலும் மேற்குலகின் மனித உரிமை அமைப்புகளாலும் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டபட்டவர். தனது ஜன்மவிரோதியான மகிந்த ராஜப்கசவை சிறைக்கு அனுப்புவேன் என சூழுரைத்துவந்த இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன அக்டோபர் 26ல் திடீரென மகிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக நியமித்துள்ளார். இதை உலகநாடுகள் எதிர்பார்க்கவில்லை. 
.
மகிந்த உலகறிந்த சீன ஆதரவாளர். அவருக்குச் சீனா தேர்தல் நிதி கொடுத்ததாக நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பின்னனியில்தான் ”மீண்டும் மகிந்த” என்கிற சினிமாவை பெரும் பொருட்செலவில் சீனாவே கதை வசனம் எழுதித் தயாரித்துள்ளதாக நம்பப்படுகிறது. கிளைமக்ஸ் காட்ச்சியின் முன்னம் மகிந்த இந்தியாவுக்கு வந்தமை மிக முக்கியமான முக்கியமான திருப்பமாகும்.
இது ’இந்தியாவை அமரிக்கா பக்கம் நகராமல் பார்த்துக்கொள்வதும் இந்திய சார்பாக இருக்கும் இலங்கை மற்றும் உலகத் தமிழர்களை அமரிக்கா பக்கம் நகர்த்துவதும்’ என்கிற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தும் சீனாவின் சூப்பர் காய்நகர்த்தல்கள்தான். இறுதியில் களைத்துபோய் உலக தமிழர்களில் ஒருசிலராவது தனக்கு பின்னே வருவார்கள் என சீனா அனுபவபூர்வமாக நம்புகிறது. 
தோற்றுபோயிருந்த மகிந்த ராஜபக்ச அணி 2018 பெப்ருவரி 10ல் இடம்பெற்ற உள்ளூராட்ச்சி தேர்தலில் பெருவெற்றி பெற்றது. கதை முடிந்துவிட்டது என நம்பியிருந்த வேழையில் மகிந்த ராஜபக்ச பெற்ற அசுர வெற்றி ஜனாதிபதி சிறிசேனவை கலங்கடித்தது. இங்கிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்ய இந்திய உளவு அமைப்பு சதி செய்வதாக சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தது வெளியில் கசிந்தது. இது ஒன்றும் புதிய விழையாட்டல்ல. 2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்றுபோனது மகிந்த ராஜபக்சவும் இந்திய உளவு அமைப்பின்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தத் தடவை இந்தியாவுக்கு சிறிசேன வில்லனாகவும் மகிந்த கதாநாயகனாகவும் ஆகியதுதான் முக்கிய திருப்பம். காத்திருந்து எதிர்வினைகளை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம்தான் இந்தியாவின் அணுகுமுறைகளை புரிந்துகொள்ள வேண்டும். எனினும் தென்னாசிய ஆடுகழத்தில் அமரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு பாதை இருக்கிறது என இந்தியாவை நம்பவைக்கும் தனது நேரு - கிருஸ்ணமேனன் காலத்து ராஜதந்திரத்தை சீனா இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. 
2015ல் இருந்தே மகிந்த ராஜபக்ச தன்னைக் கொலைசெய்ய முயன்றார் என ஜனாதிபதி சிறிசேன குற்றம் சாட்டி வந்தார். அதனால் சிறீசேன பகை மறந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததுமே எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். இத்தோடு ரணில் தொலைந்தார் என்றே பலரும் நம்பினார்கள். பல நாடாளு மன்ற உறுப்பினர்கள் மகிந்த தரப்புக்கு தாவும் சூழல் நிலவியதையும் மறுக்க முடியாது. ஆனால் ஜனாதிபதி சிறிசேன தப்பாகவோ அல்லது சூழ்ச்சியாகவோ சில அடிப்படைத் தவறுகளோடுதான் தனது பகைவனான மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருக்கிறார். 

2015ல் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு கொண்டுவரபட்ட 19ம் திருத்ததின்படி ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்க அதிகாரமில்லை. இலங்கை அரசியலில் சிறிசேன ஒரு குள்ளநரி நரி ஏன்பதில் சந்தேகமில்லை. அவர் மேற்படி தவறு என்கிற எலியையும் வைத்துத்தான் மகிந்தவுக்கு பிரதமர் பதவி என்கிற கட்டுச்சாதத்தை வளங்கியிருக்கிறார். சிறிசேன இலங்கை அரசியல் அமைப்பினைக் கண்டுகொள்ளாமலும் அமைச்சர் அவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ சபாநாயகருக்கோ அறிவிக்காமலும் அதிரடியாக மகிந்தவை பிரதமராக நியமித்தார். சீனாவை இந்தியாவை அமரிக்காவை எல்லாம் ரணில் மகிந்தவோடு ஆடுகழத்தில் இறக்கிச் சுளல விட்டு விட்டு தன்னைப் பலப்படுத்துவது மட்டுமாகவே சிறீசேனாவின் உள் நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
உள்ளூர் ஆட்ச்சி சபை தேர்தல் பெரு வெற்றியின் பின்னர் மகிந்தவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போ சிறிசேனவின் நெறியாழ்கையில் நடக்கிற தெருக்கூத்தில் கோமாளிக் கதநாயகனாக வேசங்கட்ட சமதித்ததின்மூலம் மகிந்த தனது அடுத்த தேர்தல் வெற்றி வாய்ப்பையும் கேழ்விக் குறியாக்கிவிட்டார். இதன்மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் சிறி சேனவுக்கும் லாபம்கிடைக்கலாம். 
.
என்ன முடிவென்றாலும் அதை அரசியல் அமைப்பு சட்டபடி பாராளுமன்றில் எடுங்கள் என்கிற இந்தியாவும் மேற்க்கு நாடுகளும் மீண்டும் தங்கள் நிகட்ச்சி நிரலில் இலங்கை தமிழர் பாதுகாப்பை இணைத்துள்ளனர். இது தமிழருக்கும் சம்பந்தருக்கும் கிடைத்த வெற்றியாகும். மனோ கனசனும் ரவூப் ஹக்கீமும் ரிசாத் பதிதியூனும் இணைந்து எடுத்த சந்தர்ப வாதமற்ற கொள்கை முடிவு நிலைத்தால் நிச்சயம் வரலாறில் பேசப்படும். 
.
ரணிலும் வல்லவர்தான். அவர் பதட்டப்படவில்லை. அரசியல் அமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. நானே இலங்கையின் சட்டபூர்வமான பிரதமர் என அறிவித்தார். தொடர்ந்து மேற்க்குநாடுகளின் தூதர்களையும் இந்திய தூதரையும் சந்தித்தார். சபாநாயரூடாக நாடாளுமன்றத்தை கூட்டும்படி ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். அவர் எதிர்பார்த்தபடி அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் அரசியல் அமைப்பை மதிக்கும்படிக்கும் நாடாளு மன்றத்தைக் கூட்டுமாறும் ஜனாதிபதி சிறிசேனவிடம் கண்டிப்புக் காட்டின. 

அபிவிருத்தி உதவிகள் தொடருமென்று தெம்பூடிய இந்தியாவும் அரசியல் அமைப்புச் சடத்தை அனுசரித்துப் போகுமாறு சிறிசேனவிடம் தெரிவித்தது. இந்த பின்னணியில் மகிந்த பக்கம் சாய்ந்தவர்கள் பலரும் மீண்டும் ரணில் பக்கம் வந்தனர். மகிந்தவின் கட்ட்சியிலும் சந்திரிகா சார்பானவர்கள் ரணிலை ஆதரித்தனர். நாடாளுமன்றத்தை கூட்டவேண்டுமென தமிழர் தலைவரும் எதிர்க்கட்ச்சித் தலைவருமான சம்பந்தரும் கேட்டுக்கொண்டார். 
.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க ரணிலுக்கு 113 உறுப்பினர் ஆதரவு தேவை. 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தலைமை தனது நகர்வுகளுக்கு நிபந்தனைகள் உள்ளது என உறுதியாகத் தெரிவித்துள்து. இந்தப் பின்னணியில் உலக நாடுகளும் எதிர்க் கட்ச்சிகளும் கேட்டுகொண்ட நாடாளுமன்றத்தை கூட்டும்படியான பொதுக்கோரிக்கையை ரணில் சிக்கென பற்றிக்கொண்டார். நாடாளுமன்றத்தைக் கூட்டுக என்கிற ரணிலின் கோரிக்கையில் 126 உறுப்பினர்கள் கையொப்பமிட்டது ரணிலின் முதல் வெற்றியாகும். 

எல்லாம் நல்லபடி நடந்தால் அரசியல் கைதிகள் விடுதலை உட்பட தமிழரின் முக்கிய கோரிக்கைகளில் ஒரு சிலதாவது விரைவில் நனவாக வாய்ப்புள்ளது. 
.
முன்னைய மகிந்த ராஜபக்சவின் ஆட்ச்சியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 2004 சுனாமியின்போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுமதி ஏதுமின்றி நிவாரணப் பணிக்கென அமரிக்க கடற்படை இலங்கையில் தரை இறங்கியது. இதுபற்றி அமரிக்கா எந்த நாட்டுக்கும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் முன்னம் 1987ல் இந்தியா வடகிழக்கில் தரை இறங்கியது. ’அரச குடும்பம் பிழவுபட்டால் அடுத்த ஊரார் கட்டபஞ்சாத்து’ இதைத்தானே மகாவம்சம் சொல்கிறது. மகிந்த ராஜபக்ச நல்ல ஞாபகசக்தி உள்ள தலைவர் என்பதில் சந்தேகமில்லை.

No comments

Powered by Blogger.