Header Ads



தற்போது இலங்கை, பிரதமர் யார்...??

மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சவை பிரதமராக, சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை திட்டவட்டமாக கூற முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் ஆசனம் மற்றும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க சபாநாயகர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இதனை அஜித் பெரேரா மறுத்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “மகிந்த ராஜபக்சவை பிரதமராக, சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.

சபாநாயகர் செயலகத்தில் இதுபற்றி விசாரித்தோம். மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அங்குள்ள அதிகாரிகள், தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக, சபாநாயகர், ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்” என அஜித் பெரேரா மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் ஆசனம் மற்றும் அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பிரதமர் தொடர்பான வெளியான வர்த்தகமானியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.