கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய், இது உனது அழிவிற்கான ஆரம்பம் - சுமந்திரன் ஆவேசம்
எங்கள் உப்பைத்தின்று ஜனாதிபதியாக வந்து இன்று எங்களையே கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இன்று தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நாம் 15 ஆக குறைந்து இருக்கின்றோம். அதிலும் இங்கு சுற்றித் திரிகின்ற ஒருவரினால் அது மேலும் குறைந்து பதினான்கு ஆகிவிட்டது. அது 14 ஆக இருந்தாலும் இன்றைய சூழலில் தீர்மானிக்கின்ற சக்தி நாங்கள்தான்.
அதனை கவனமாக பிரயோகிக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். அதேவேளை பேரம் பேச வேண்டும் இரண்டையும் செய்கின்றோம். வருகின்ற நாட்களில் எங்களுடைய மக்கள் குழம்பக் கூடாது. ஏன் இவரை சந்தித்தார். ஏன் இவரை சந்தித்தார் என்று. எல்லோரையும் நாம் சந்திப்போம்.
ஆனால் எடுக்கின்ற தீர்மானம் தவறான தீர்மானமாக நாம் எடுக்க மாட்டோம். சரியான தீர்மானத்தை நாம் எடுப்போம். எங்களுடைய மக்களின் நலன் கருதியே அந்த தீர்மானம் எடுக்கப்படும்.
இந் நிலையில் சிறுபிள்ளைத்தனமாக, நாமல் ராஜபக்ச அவர் சிறுபிள்ளை தான். இன்று காலையில் டுவிட்டரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று சொல்லியிருக்கின்றார்.
கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள் . அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்து கொண்டு வருவோம் என்று நினைக்கின்றார்கள்.
விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானது நியாயமானது அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக்கூடாது.
நேற்றைய தினம் எங்களுடைய அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை. எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதனால் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பை காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பை காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம்.
எங்களுடைய அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனை சொல்லுகின்றார்கள். அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடுதான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள் மற்றவர்களெல்லாம் ரொக்கப்பண வேலை தான் செய்வார்கள்.
பாராளுமன்றத்தை திறக்காவிட்டால் திறப்போம், நாம் அங்கு செல்வோம், பெரும்பான்மையை அங்கே காட்டுவோம், அதனை அங்கிருந்துதான் காட்ட வேண்டும் என்றும் இல்லை. அதனை எங்கிருந்தும் காட்டலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஆனவர் . எங்களுடைய கட்சியை கூறு போடுவதற்கு இன்று முனைந்திருக்கிறார்.
இது அவருடைய இறுதிக்கான ஆரம்பம். அவருக்கு பகிரங்கமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எங்களுடைய உப்பைத் தின்று வந்து எங்களுடைய கட்சியில் இருந்து ஒருவரை திருடி அரை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து இருக்கின்ற அந்த மோசமான செயலை செய்த ஜனாதிபதி உனக்கு எப்படி நாங்கள் ஆதரவு கொடுக்கப் போகிறோம்.
எங்களுடைய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டுவந்தோம். தேர்தலிலேயே தோற்றிருந்தால் ஆறடி நிலத்தில் போயிருப்பேன் என்று சொன்னாயே ஆறடி நிலத்திற்குள் போகாமல் உன்னை காப்பாற்றியது நாங்கள் அல்லவா.
இன்று எங்களை பிரித்து போடுவதற்கான சூழ்ச்சி செய்கின்ற கபடமான ஜனாதிபதியாக மாறி இருக்கின்றாய் இது உனது அழிவிற்கான ஆரம்பம் என தெரிவித்தார்.
Well said for this man
ReplyDeleteஉண்மைகள் வெளியே கக்கப்படுகிறது. இத்தனைகாலமும் மைதிரி ரணில் அரசை உருவாக்கி காப்பாற்றிவருவது சுமந்திரன் என்கிற விடயம் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் அதிபர் சிறிசேனாவின்மீது கோபப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால் உங்கள் தயவில் இருந்த அரசிடமிருந்து அரசியல் கைதிகள் விடுதலையைக்கூட கேட்டுபெற நீங்கள் விரும்பவில்லையே ஏன்? அப்ப ஏன் இவ்வளவு காலமும் இந்த அரசுக்கு முண்டுகொடுத்ததால் பெற்ற ஆதாயம் என்ன? தயவு செய்து விழக்குங்கள்.
ReplyDeleteSo there is a chance that TNA would support UNFA or stay neutral.
ReplyDeletewell said
ReplyDeleteசரியாக சொன்னிர்கள் ஐயா.
ReplyDeleteGood dreams
ReplyDeleteMr.sumathiran!
Good talk sir.Do not be afraid and be firmed.This decision to sack the Ranil Government is to revenge to the decisions of cabinet ministers not allow to carry his the gold Railway line project of such huge cost as it made of gold.
ReplyDeleteNow it is no use of cry,the decision of selecting the common candidate from the same racist corrupt party shows the intelligentsia of so called highly educated people.When we consider state of affairs,we have to think twice are we really educated and intelligent.
Srilankans, who are bragging that we highly educated and insulting other countries and other people,are far behind those countries and those gone past us miles.We still bragging and fighting each other.Now We are even behind Ethiopia and Nepal in terms of value of their currencies.it is no use talking other east Asian countries,who once well behind us,development and state of economy.
Countries
பச்ச இனவாதி துரோகி - இவன் மைத்திரி. பசுத்தோல் போர்த்திய புலி இவன்.
ReplyDeleteஇவனுக்குத் தேவை மீன்டும் ஒரு Term இற்கு தான் மீன்டும் ஜனாதிபதியாக வரவேன்டும் என்று. மகிந்தவிற்குத் தேவை அடுத்து வரும் ஒரு Term இற்கு தனது தம்பிமார்கள் யாரும் ஜனாதிபதியாக வந்தவிடக்கூடாது என்பது.
எனவேதான் இந்த மைத்திரி மகிந்த - இந்த இரு கூத்தாடிகளும் சேர்ந்து நாட்டையே வேட்டையாடுகிறார்கள் - தங்களது இருவரது சுயநலத்திற்காக மாத்திரமே.
மைத்திரி - இவன் ஒரு பச்சத் துரோகி நாட்டுக்கே...........
மகிந்த - இவன் ஒரு கூத்தாடி - நாட்டையே கூத்தாட வைத்திருப்பவன் தனக்காக.............
தமிழ் மக்களை காலாகாலமாக ஏமாற்றி வரும் சுத்துமாத்து சுமந்திரன் அடுத்த தேர்தலை குறிவைத்து மக்களை முட்டாள்கள் ஆக்க பேசிய வார்த்தைகள். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ரணிலின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நின்றதே இவர்கள் தான்.
ReplyDeleteஇவர்கள் எதிர்க்கட்சி என்ற வகையில் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றவே இல்லை. ரணிலின் அடுவருடியாகவே செயற்பட்டார்கள். இப்பொழுது ரணிலின் ஆட்சி போய்விட்டதே என்றுதான் அலறுகின்றார்கள். இவர்கள் ரணிலுடன் இருந்து, ரணிலை நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் காப்பாற்றியும் செய்ய முடியாமல் போனதை அந்தப் இளைஞன் நாமல் ராஜபக்ஸ தனது சிறை அனுபவத்தின் நட்பை வைத்து தனது தந்தை மூலம் அவ்வ்வளவு கைதிகளுக்கும் விடுதலை வாங்கித் தந்து விட்டான்.
மக்களின் (கைதிகளின்) வலி, சில வாரங்களே ஒன்றாக இருந்த நாமல் ராஜபக்ஷவிற்கு புரிகின்றது. ஆனால் சொந்த மக்கள் என்று சொல்லி சுத்துமாத்து பன்னுகின்றவர்களுக்கு புரியவில்லை.
இப்படி ஒரு ஆள் கிடைத்தது தமிழ் மக்களுக்கு பெரிய சாபம். இவரை விட ரிஷாத் அவர்கள் எவ்வளவு மேல்?
ReplyDeletePoda muttal
ReplyDeleteநாதாரித்தனம் பண்ணினாலும் நாசுக்காக நாதாரித்தனம் பண்ணும் சுத்துமாத்து. தமிழர்கள் தலையில் நல்லா மிளகாய் அரைக்கின்றார்.
ReplyDelete