அமைச்சுப் பதவி, வேண்டாமென்றார் துமிந்த - பேச்சு இணக்கப்பாடின்றி முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள துமிந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரு மணி நேரம் நீடித்த இச் சந்திப்பில் எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டதாக தெரியவில்லை என்றும் அரசியல் தகவல்கள் தெரிவித்தன.
இச் சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையே உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் அதனைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியினருக்கு கொடுக்கப்படும் சிக்கல்களே அதற்கு க்காரணம் எனவும் துமிந்த திஸாநாயக்க இதன்போது பசில் ராஜபக் ஷவிடம் விளக்கியுள்ளார்.
இச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தீர்க்க பசில் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் உறுதியான அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் தனது ஆதரவு குறித்து யோசிக்கலாம் எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பிரச்சினைகளைத் தீர்க்க தான் நேரடியாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள பசில் ராஜபக் ஷ, மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அமைச்சுப் பதவியை ஏற்பது குறித்து, உறுதியான வாக்குறுதிகள் எதனையும் துமிந்த திஸாநாயக்க வழங்காத நில யில், பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment