மைத்திரியின் இன்றைய, உரையிலிருந்து ஒருபகுதி
நாடாளுமன்றை கூட்டியிருந்தால் சிலரின் உயிர்கள் போயிருக்கக் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது நாட்டு மக்களுக்கு ஆற்றி வரும் உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் மிகவும் பக்கச்சார்பாக செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்றை கூட்டுவதற்கே தாம் தீர்மானித்திருந்தாகவும், எனினும் நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கருத்தில் கொண்டு தாம் நாடாளுமன்றை கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்றை கூட்டியிருந்தால் நாடாளுமன்றில் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டிருக்கும் எனவும், சில தரப்பினர் இது குறித்து எச்சரித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலரின் உயிர் இழப்பதற்கு நாடாளுமன்ற அமர்வுகள் வழியமைத்திருக்கும் எனவும் இந்த உயிரிழப்புகள் நாட்டின் அநேக பகுதிகளில் குழப்பங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை சுயாதீனமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை 100 மில்லியன் முதல் 150 மில்லியன் வரையிலும் சில சந்தர்ப்பங்களில் 500 மில்லியன் ரூபா வரையிலும் பேரம் பேசப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய் நாட்டின் நன்மை கருதி நான் நாடாளுமன்றை கலைத்துள்ளேன் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது, தற்போதைய காபந்து அரசாங்கத்திற்கே அதற்காக உரிமை உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அது அரசியல்வாதிகள் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Poda loosu
ReplyDeleteஇந்த நாட்டு மக்களையும் இந்த நாட்டையும் துச்சமாக மதித்து தனது பதவியையும் களவாடும் எல்லா சந்தர்ப்பங்களையும் பாதுகாத்துக் கொண்டு நீதி,நேர்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இப்போது பொதுமக்களுக்கு உபந்நியாசம் செய்கிறார்.ஆகக்குறைந்தது எதிரியுடன் எச்சரிக்கையாக நடந்து கொள் என ஆரம்பபாடசாலையில் சொல்லிக் கொடுக்கும் புத்திகூட இந்த மட்டைக்கு விளங்குவதில்லை. இவரை மட்டம் தட்டி ஒதுக்குவதற்கு எதிரிகள் போட்ட திட்டம் ஒருசில நாட்களில் வெற்றியடைந்துவிட்டது.இப்போது தனிக்கட்சி அமைந்து எதிரி இவருடைய முனாபிக்குகளையும் காவிக்கொண்டு இவரை ஒதுக்கிவிட்டான்.இந்த சாதாரண உண்மையும் விளங்காதவருக்குத்தான் நாம் எல்லோரும் சனங்களுக்கு அதிபதி என கூறுமாறு பணிக்கப்பட்டிருக் கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். கபினட் அமைச்சர்கள் தவிர ஏனைய எம்.பீக்கள் யாருடனும் நேரடியாகக் கதைப்பதில்லை என்ற அவருடைய கொள்கை, எவ்வளவு தூரநோக்குடன் செயல்பட்டதை நினைத்துப் பாரக்கின்றேன்.
ReplyDeleteதூரநோக்கு ஒரு தலைவருக்கு மிகவும் அவசியம். அது இல்லாமல் நீங்கள் எடுத்த அவசர முடிவால் தான் இவ்வளவு பிரச்சினையும்.
ReplyDelete