இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சம்பந்தனுடனும், சபாநாயகருடனும் ஆலோசனை
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது-
2
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதன் முக்கியத்துவம் குறித்து சபாநாயகருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதரகத்தின் கீச்சகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
“இந்த ஜனநாயக நிறுவனங்கள் சிறிலங்கா மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். தெரிவு செய்யப்பட்ட பிரதிநி்திகளை சொல்ல விடுங்கள்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த தலைவன் தன்நாட்டு விவகாரத்தில் கள்ளன் அனியாயக்கார அமெரிக்காவின் யோசனகளை கேட்டு அவைகள வழிபடத்தோங்கினால் தன்நாட்டின் இழந்துவிட்டான்,தற்போதய பிரச்சினையில் மஹிந்த இராஜபக்ஷ்ச அமெரிக்காவிட்கு நெருக்கமானவராக இருந்திருந்தால் அமெரிக்கா தற்போது இல்ங்கையை நோக்கி சட்டத்தை பேனி ஜனநாயகத்தை கடைபிடியுங்கள் என்ற சிந்தனையையும் பிடிவாத்த்தையும் எப்போதே குழியில் புதைத்திருப்பான்!
ReplyDelete