ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக, எமது போராட்டம் தொடரும்
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பிற்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் எனவே அவரது சட்ட விரோத செயற்பாடுகளுக்கெதிராக எமது போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ள நிலையில் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
“கடந்த வாரம் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷ அணியினரும் தமக்கு பாராளுமன்றில் 113 ஆதரவு இருப்பதாகவும் எனவே பாராளுமன்ற பெரும்பான்மையோடு அரசாங்கத்தை உருவாக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக தெளிவாக கூறியிருந்தார்கள்.
இவ்வாறு கூறி நான்கைந்து நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது பாராளுமன்றை அவசர அவசரமாக கலைத்துள்ளார்கள்.
ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவும் இனைந்து இந் நாட்டில் சட்டத்திற்கு விரோதமான ஆட்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலை அறிவித்துள்ளார்கள். தேர்தலுக்கு முகம் கொடுக்க நாம் தயார் எனினும் இவர்களது கூட்டணி தேர்தலை நீதியும் நியாயமான முறையில் நடாத்துவார்களா என்பது தொடர்பில் நீதி மன்ற ஆலோசனையை பெறவுள்ளோம்.
அதே போல் ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக எமது போராட்டங்களை மீண்டும் நாங்கள் ஆரம்பிப்போம்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த மைத்திரி கூட்டணி எடுத்த இம் முடிவை ஏற்றக்கொள்ள முடியாது ஏனென்றால் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.” என தெரிவித்தார்.
Post a Comment