Header Ads



சபாநாயகர் கருவை தாக்குகிறார், முன்னாள் சபாநாயகர் லொக்கு

முன்னாள் சபாநாயகா் லொக்குபண்டார ஜனாதிபதி செயலகத்தில் இன்று(03.11.2018) ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டு  அவா் கருத்து தெரிவிக்கையில் 

 கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவா்த்தன, பிரேமதாச சந்திரிக்கா மகிந்த ராஜபக்ச ஆகியோா்களுக்கு இருந்த அதே அதிகாரமே தற்போதைய ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனாவுக்கும உள்ளது. அவா் அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தினை பாவித்தே பாராளுமன்றத்தினை கூடடுவதுக்கும் அதனை 2 மாதத்திற்கும் மூடி வைப்பதற்கும்  சட்டத்தினை  நடைமுறைப்படுத்தியுள்ளாா். 

பாராளுமன்ற அரசியலமைப்புச் சட்டத்தின்  70வது சா்த்தில் உள்ளதனையே ஜனாதிபதி பாவித்துள்ளாா்.  அந்த சா்த்தில  கடந்த 9வது திருத்தச் சட்டத்தில் இவா்கள் 70வது சட்டத்தினை ஒரு கொமாவைக் கூட 9வது சா்த்தில் குறிப்பிடவில்லை. ஆகவே பாராளுமன்றத்தினை கூட்டத் தொடரை ஆரம்பிப்பதுக்கும் அதனை மூடுவதுக்கும்    ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதுவரை  சபாநாயகா் பாராளுமன்ற தொடரை ஆரம்பிக்க முடியாது. நான் சபாநாயகராக இருந்த சமயத்தில் இந்த நாட்டின் 3வது பிரஜையாக இருந்து அதனை இன்றும் பாதுகாத்து வருகின்றேன். . சபாநாயகராக பாராளுமன்றத்தினால் தெரிபு செய்யப்பட்டவா் இந்த நாட்டின் அரசியலமைப்புக்குச் சாா்பாக தமது பதவியை வகிக்க வேண்டும். அவா் எவ்வித கட்சிக்கும் சாா்பாக இருக்க முடியாது. மத்தியஸ்த்தம் வகிக்க வேண்டும்.  அவா் நேற்றுக் கூட கட்சித் தலைவா் கூட்டத்தினை கூட்டிய விடயமும்  சட்ட விரோதமாகும். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.  பாராளுமன்றத்தினை திறப்பதற்கான திகதியை ஜனாதிபதி கெசட் பன்னும் வரை.

  நான் பதவி வகித்த காலத்தில் எவ்வித கட்சிக்கும் நான் விலை போகவில்லை. சபாநாயகராக பதவியில் இருந்து இன்று வரை நான் சிறிக்கொத்தவுக்கே போக வில்லை. அதனையே தற்போதைய சபாநாயகா் பாதுகாத்தல் வேண்டும். பாராளுமன்றத்தினை கலைக்கவும் கூட்டவும் பஜட்டில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது பிரதமருக்கு நம்பிக்கையில்லா தீா்மாணம் எடுத்து பிரதமரை தோற்கடிததால் கூட பாராளுமன்றததினை ஜனாதிபதிக்கு கலைக்க முடியும். அவரே அமைச்சரவையின் தலைவா் பாராளுமன்ற கூட்டங்களை ஆரம்பித்து வைப்பதும் முடி வைப்பதற்கும் ஜனாதிபதி செயல்படுகின்றனாா். என முன்னாள் சபாநாயகா லொக்குபண்டார தெரவித்தாா்.  அதற்காக வெளிநாட்டு  வெள்ளைக்காரர்களிடம் போய் நமது சட்டங்களையும் உள் விவகாரங்களை தலையிடச் சொல்லத் தேவையில்லை . 200 வருடங்களுக்கு முன் வெள்ளளையா்கள் இந்த நாட்டினை ஆக்கிரமித்த யுகம் சென்றுவிட்டது. எனவும் முன்னாள் சபாநாயகா் லொக்குபண்டார தெரவித்தாா். 

(அஷ்ரப் ஏ சமத்)

1 comment:

  1. Some times we should go to White man. For an example, When Mahinda was adamant to leave after conclusion of 2015 Presidential election.........

    ReplyDelete

Powered by Blogger.