களத்தில் குதிக்கிறார் சந்திரிக்கா
சமகால அரசியல் நெருக்கடி காரணமாக பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாமல் போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர கட்சியை பாதுகாக்கும் தீவிர நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மக்களுக்கு துரோகம் செய்த குழுவினரால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு சந்திரிக்கா குமாரதுங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.
விசேட உரையாற்றி அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் குழுவினர் இணைந்து ஜனநாயக நாடு ஒன்றை கட்டியெழுப்புவதற்காக போராடி வெற்றி கொண்டோம்.
தற்போதுதாமரை மொட்டுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமல் செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைவிட்டு வேறு கட்சிக்கு யார் சென்றாலும் தான் தனது கட்சியை கைவிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ந்து போன கட்சியை மீளவும் கட்டியெழுப்பி வெற்றியின் பாதைக்கு கொண்டு செல்வதற்காக உண்மையாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நேசிக்கும் தரப்பினருடன் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
துமிந்த திஸாநாயக்க உட்பட குழுவினருடன் சந்திரிக்கா இன்றைய தினம் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Welcome back.. Please take some wise steps... There are many culprits...
ReplyDelete