பிரபல ஐரிஷ் பாடகி, இஸ்லாத்தைத் தழுவினார்
-M.I.Abdul Nazar-
ஐரிஷ் பாடகியும் பாடலாசிரியையுமான மெக்டா டாவிட் என அறியப்பட்ட சினியெட் ஓகொன்னோர் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஷுஹாதா டாவிட் என மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் தனது டுவிட்டரில் அறிவித்தார்.
''நான் முஸ்லிமாக மாறுவதில் பெருமையடைகின்றேன் என இத்தால் அறிவிக்கின்றேன். எந்தவொரு புத்திசாலித்தனமான அறிவாளியினது பயணத்திலும் இயல்பாக எடுக்கப்படும் முடிவு இவ்வாறானதாகவே இருக்கும். இஸ்லாம் பிற கொள்கைகள் அனைத்தையும் மாற்றியமைத்துள்ளது. எனக்கு புதிய பெயரையும் அளித்துள்ளது. நான் ஷுஹாதாவாக இருப்பேன்'' எனவும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தொழுகைக்காக அழைக்கப்படும் அதானை கூறும் காணொளியொன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். இது எனது அதான் சொல்லும் முதலாவது முயற்சி. நான் உணர்ச்சிவசப்பட்டதால் சில உச்சரிப்புப் பிழைகள் ஏற்பட்டுள்ளன என அதற்குத் தலைப்பிட்டுள்ளார்.
அதனை நான் முப்பது தடவைகள் பயிற்சி செய்தபோது உலகத்தை நோக்கிய கவனம் நின்றுவிடுகின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
51 வயது கலைஞரான இவர் பிரிந்து சென்றதொரு கத்தோலிக்க பிரிவின் போதகராக பதவியேற்க விருந்தார். மேலும் கடந்த வருடம் அமெரிக்காவில் தீவிர மனநல சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தனது நெருங்கிய நண்பியான எலைன் தனக்கு முதலாவது ஹிஜாப் ஆடையினை வழங்கியதாகவும் அதை தான் அணிந்தபோது உடல் சிலிர்த்ததாகவும் மற்றுமொரு டுவிட்டர் பதிவில் ஓகொன்னோர் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை தான் பிரசுரிக்கப்போவதில்லை எனவும் அது தனிப்பட்ட ஒன்று எனவும் ''நான் ஒரு அசிங்கமான கிழவி; ஆனால் மகிழ்ச்சியான கிழவி'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஓகொன்னோர் முன்னணி பாடகியாக இருந்த அதேவேளை, புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு தர்ம ஸ்தாபனத் திட்டங்களுக்காகவும் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது தனிப்பட்ட பத்து பாடல் தொகுப்புக்களுக்கு மேலதிகமாக பல தனியான பாடல்களையும், திரைப்படங்களுக்கான பாடல்களையும், ஏனைய கலைஞர்களுடன் இணைந்தும், தர்ம ஸ்தாபன நிதி சேகரிப்பு கலை நிகழ்வுகளிலும் அவர் பாடியுள்ளார்.
ஓகொன்னோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளமையினை முஸ்லிம் அறிஞரான யாசிர் காதி வரவேற்றுள்ளார்.
2015 ஆம் ஆண்டு சர்வதேச மதிப்பீடுகளின் பிரகாரம் உலகில் 1.8 பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உலக மக்களில் நான்கில் ஒருவர் முஸ்லிமாவார். அதன் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டு பிவ் ஆய்வு மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 2010 தொடக்கம் 2015 வரையான முஸ்லிம்களின் 0.3 வீத அதிகரிப்பு மத மாற்றத்தினால் ஏற்பட்டுள்ளது. அதேவேளை 99.7 வீதமான அதிகரிப்பு இயற்கையான முறையில் அதிகரித்துள்ளது.
முஸ்லிம் அல்லாத அமெரிக்கா போன்ற நாட்டில் 25 வீதமான அமெரிக்க முஸ்லிம்கள் மதம் மாறியவர்களாவர் எனவும், பிரித்தானியாவில் சுமார் ஆறாயிரம் பேர் வருடாந்தம் இஸ்லாத்திற்கு மதம் மாறுவதாகவும் நியூயோர்க் டைம்ஸ் மதிப்பீடு செய்துள்ளது.
பிவ் ஆய்வு மத்திய நிலையத்தின் ஆய்வுகளின் பிரகாரம் இஸ்லாத்திற்கான 77 வீதமான மத மாற்றங்கள் கிறிஸ்தவத்தில் இருந்து இடம்பெறுவதாகவும், 19 வீதமான மத மாற்றங்கள் நாத்திகத்திலிருந்து இடம்பெறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறமாக இஸ்லாத்திலிருந்து வெளியேறிய 55 வீதமானோர் நாத்திகத்திற்கு சென்றுள்ளதோடு 22 வீதமானோர் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளனர்.
-Vidivelli
யாரோ ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் "பிரபல பாடகி" என்று போட்டு இருக்கின்றீர்கள். இலங்கையில், இந்தியாவில் இருக்கும் மக்களில் யாருக்காவது இவரைப் பற்றி இதுவரை தெரியுமா? இவர் பாடிய இரண்டு பாடல்களை "கூகுள்" பண்ணாமல் சொல்ல முடியுமா? இஸ்லாத்தை யாரோ ஒருவர் ஏற்றுவிட்டார் என்பதற்காக அவரை "பிரபல பாடகி" என்று சொல்வது என்ன நியாயம்?
ReplyDeleteயாராவது இஸ்லாத்தை ஏற்றால் "பிரபல" என்று அடைமொழி கொடுக்கின்றீர்கள், அல்லது உண்மையிலேயே பிரபலமான மைக்கல் ஜாக்சன், நீல் ஆம்ஸ்ரோங், மிஸ்டர் பீன் போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று பொய் தகவல்களை பரப்புகின்றீர்கள்.
இஸ்லாத்தில் இருந்து பலர் இப்பொழுது வெளியேறி வருகின்றார்கள். ஒரு காலத்தில் நடக்கவே முடியாது என்று இருந்த விடயம் இப்பொழுது நடக்க ஆரம்பித்து விட்டது.
முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு மார்க்கம் தெரியாத மக்களாய் நாங்கள் இண்டைக்கி இருக்கிறோம், கண்டதை, கேட்டதை எல்லாமே இஸ்லாம் என்று நம்புகிறோம். ஆனால் இஸ்லாம் என்றது அல்லாஹ்வின் வழிகாட்டலும், தூதரின் வழிமுறையும், நேர்வழியில் இருந்த சஹாபாக்களின் விளக்கத்தின் மூலமும் பெறப்பட்டதே தவிர, நான்கு பேர் சேர்ந்துகொண்டு புதுசாக உருவாக்கிக்கொண்டு பெயர் வைப்பது அல்ல.
ReplyDeleteஅல்குர்ஆனில் உள்ள 109 வது அத்தியாயம் சூரத்துல் காஃபிரூன், 6 வசனங்களுடன் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அற்புத வார்த்தைகள். இந்த அத்தியாயத்தில் வரும் 6 வது அரபு வசனமே லகும் தீனுக்கும் வலியதீன் (لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ), இதன் அர்த்தம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
முதலில் இந்த இறைவசனம் எங்கு? எப்போது? எந்த சூழலில் இறங்கியது இந்த வசனத்தின் பின்னணி என்ன? என்பதை நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு அல்குர்ஆன் வசனத்தையும் நாம் எங்கு? எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவறாக இறைவசனங்களை சம்பந்தமில்லாத சூழலில் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
“முஹம்மதே நீர் ஒராண்டு எங்கள் தெய்வங்களான லாத்து உஸ்ஸாவை வணங்கும், அது போன்று நாங்களும் அடுத்த வருடம் நீர் அந்த ஓரிறை கொள்கையை நாங்கள் வணங்குகிறோம் என்ன சம்மதமா?” என்ற வடிகட்டிய இணை வைப்பு சமாதானத் திட்டத்தை எடுத்து வைத்தனர். குரைஷி தலைவர்கள் முஹம்மது ஸல் அவர்களை தங்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்க முயற்சித்த இந்த வேளையில் தான் சூரத்துல் காஃபிரூன் முழு அத்தியாயமும் மற்றும் சூரத்துல் ஜுமர் அத்தியாயத்தின் 64-வது வசனம் என்ற இறைவசனம் இறங்கியது.
ஆக இஸ்லாம் மார்க்கத்தில் கலப்படம் செல்ல முடியாது. அவரை, இவரை சந்தோசப் படுத்துவதற்காக அடுத்த மதங்களில் உள்ள விடயங்களை இஸ்லாத்திற்குள் கொண்டுவர முடியாது.
ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் அவருக்குத்தான் நன்மையே தவிர, இஸ்லாத்திற்கு இல்லை.
இந்த பெண்மணி யார் என்று தேடித் பார்த்தால் இவரது வாழ்க்கை குழப்பங்கள் கொண்டது என்று புரிய கூடியதாக இருக்கிறது. போதை பழக்கம், தலையை மொட்டை அடிப்பது, பலவிதமான ஆபத்தான மனநோய் பாதிப்பு என்று நிறைய சிக்கல்கள் உள்ள ஒருவர் இவர்.
இவர் இஸ்லாத்தை ஏற்றதாக சொல்கின்ற அமைப்பு மிகவுமே வழிகேடான ஆபத்தான அமைப்பு ஆகும். இவரை இஸ்லாத்தை ஏற்க வைத்தவர்களுக்கு முதலில் இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமான கடமை சமூகத்திற்கு இருக்கிறது. இவர் இஸ்லாத்தை ஏற்று இவரை அதான் (பாங்கு) சொல்ல அவர்கள் அனுமதிக்கின்றார்கள், அது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான முறையில் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை யாருக்கும் மாற்ற அதிகாரம் இல்லை.
இப்படியே போனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற நிறைய மக்கள் பெயருக்கு இருப்பார்கள், அவர்களுக்கும் அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து இறக்கிய இஸ்லாத்திற்கும் சம்மந்தமே இருக்காது. அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
Hari Thivahar: Just have some readings about Islam.
ReplyDelete