"ஐ.தே.க.வின் தலைமையை ரணிலே தீர்மானிப்பார்"
ஐக்கிய தேசிய கட்சியின் ஒவ்வொரு அசைவுகளின் பின்னணியிலும் ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். அவர் எடுக்கு தீர்மானத்திற்கமையவே கட்சியின் மாற்றங்களும் அமையும். அவ்வாறே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலும் எதிர்காலத்தில் அவரே தீர்மானிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
மேலும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி சுதந்திரமான ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதே எங்களின் நோக்கம். அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் ஆட்சிபலத்தை கைப்பற்றி உறுதியான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கான மாற்று வழிமுறைகளையே தற்போது வகுத்து வருகின்றோம். அதில் ஒரு கட்டமாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நிதிமன்றத்தின் தீர்ப்புக்கள் கிடைக்கபெற்றவுடன் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டனார்.
(நா.தினுஷா)
அவர் உசுரோடு இருக்கும் வரை தலைமைத்துவத்தில் இருந்து விலகமாட்டார் ஆனால் அவரை அந்த பதவியில் இருந்து தூக்கி எரிய வேண்டும்.ஐரோப்பாவில் மாதிரி ஒவ்வொரு நான்கு வருடத்துக்கு ஒருமுறை புதிய தலைவரை அந்த கட்சியில் இருந்து வாக்களிப்பு மூலம் தெரிவு செய்ய வேண்டும்.
ReplyDeleteMy3 killed SLFP
ReplyDeleteRANIL WILL KILL UNP.
MR WILL RUN THE NATION BY OWN.
APA SARANAI SRILANKA
ஜனாதிபதி இவரை அகற்றியது சரி என்றும் ரணிலின் நடவடிக்கைகள் தான் எல்லாவற்றுக்குமே காரணம் என்பதை அவரின் பிடிவாதத்திலிருந்து தெளிவாகிறது.
ReplyDeleteபொருத்தமானவர்களுக்கு வழிவிட்டு அரசியலிலிருந்து விலகுவதே ரணில் நாட்டுக்கும், ஜனநாயத்திற்கும் செய்யும் சிறந்த சேவையாக அமையும். எனினும் பதவி மோகம் கொண்ட ரணிலால் அதையெல்லாம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
ReplyDelete