மூடிய கதவுகளின் பின்னால், ரணில் - கோத்தபாய பேசியது இதுதான்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சர்வதேச சமூகத்திடமிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
ரணில்விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் மகிந்தராஜபக்சவின் பிரதிநிதியாக கோத்தபாய ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் குழப்பகரமான நிலவரம் காரணமாக சர்வதேச சமூகத்திடமிருந்து எதிர்பாராமல் எழக்கூடிய எதிர்மறையான குழப்பமான உணர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கும் சிறிசேனவிற்கும் அவசியமான பெரும்பான்மையுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையும் பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தையும் பாதுகாப்பதற்கான மக்களின் ஆதரவு தனக்குள்ளது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் அதனை நிரூபிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றது வேறு எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment