பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, நீதிமன்றம் செல்வோம் - அநுரகுமார
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
இன்று -10- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தத் தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
Mr. Talker... Many times you went to Courts before.. Did you do anything useful??? Your are only good to read records numbers and all nothing else. Useless talk and useless selfish Party... This is the reason you can not come up and you will not come up. Very soon well educated community will enter to politics wait and see.
ReplyDelete