'முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான எமது கூட்டு முயற்சிகள்' - ஜம்இய்யத்துல் உலமா கலந்துரையாடல்
இன்று (02.11.2018) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் அமைப்புகளுடன் 'முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான எமது கூட்டு முயற்சிகள்' எனும் தலைப்பில் ஒரு கலந்துரையாடலை அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பின்களும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். பி.ப 4.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்;-ஷைக் அர்கம் நூரமித் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி குறிப்பிட்டார்கள். அதிலே அவர் முஸ்லிம் அமைப்புகள் பல சேவைகளை செய்தபோதும் கூட்டாக பல விடயங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஒருவருக் கொருவர் பரஸ்பரம் உதவி செய்து கூட்டாக பணிகளை மேற்கொள்ளும் போது பல நன்மைகளை அடையலாம் எனவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது அமைப்பு மேற்கொள்ளும் சேவைகளையும் பணிகளையும் முன்வைத்தனர். குறித்த கலந்துரையாடலில் இவ்வாறான அனுபவ பகிர்வுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்றும் இதன் மூலம் ஒவ்வொரு அமைப்பும் அடுத்த அமைப்புகள் மேற்கொள்ளும் சேவைகளை அறிந்து, அவற்றுடன் இணைந்து செயற்பட இது உதவியாக அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இக்கலந்துரையாடலில் பின்வரும் அமைப்புகளும் இயங்கங்களும் பங்குபற்றின:
- Advocacy and Reconciliation Council
- Al Kafaala Foundation
- All Ceylon Yong Men’s Muslim Association Conference
- Association of Muslim Youth of Sailan (Jamiyyathus Shabab)
- Centre for Islamic Studies
- Ceylon Baithulmal Fund
- Colombo District Masjids Federation
- International Islamic Relief Organization
- Islamic Center
- 10.Jamathus Salamh
- 11.Muslim Aid
- 12.Muslim Council of Sri Lanka
- 13.Nidha Foundation
- 14.Sri Lanka Jamaat e-Islami
- 15.Sri Lanka Muslim Media Forum
- 16.Zam Zam Foundation guarantee Limited
Post a Comment