பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் - முரளி
ஜனநாயகம், உரிமைகள் சட்டம் என்பன இரண்டாவது, நாட்டு மக்களுக்கு மூன்று வேளை தேவையான உணவு, பிள்ளைகளுக்கான கல்வி என்பனவே முதன்மையானது என இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றின் சிங்களச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் அண்மையில் 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், ஆனால் வடக்கு சார் அரசியல்வாதிகள் யாரும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் நாட்டில் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு தரப்பினரிடத்திலும் தவறுகள் உள்ளன. பெரும்பான்மையின மக்கள் முழுதும் தவறிழைத்தார்கள் என நான் கூறவில்லை, அவர்களுள் 5 சதவீதமானவர்கள் அரசியல் சூழலை சாதகமாக்கிக்கொண்டு தவறிழைத்தார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் முழு நாட்டையும் பாதித்தது, இவ்வாறான சூழலிலேயே பிரபாகரன் பயங்கரவாதியாக ஆக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Someone pushed him to say this....!!!
ReplyDeleteYou better do your job for the cricket nation instead of going out of the country if u feel this
முரளிக்கு தேவை இல்லாத வேலை. விளையாட்டு வீரராக மதிப்பை பெற்றுக்கொண்ட இவர், தேவையில்லாத விடயங்களில், தெரியாத விடயங்களில் மூக்கை நுழைந்தது மூக்குடைபடக் கூடாது. விளையாட்டிற்கும், மக்களிற்கும் தன்னால் முடிந்த சேவைகளை செய்துவிட்டு ஒரு ஜென்டில்மேனாக இருப்பதுதான் சரி.
ReplyDeleteShall we send u and your family to India?, As you said this country only for Sinhalese...
ReplyDeleteDo you anything....about history...?
U see now the white van owner, appreciated ur comments...! U did good job for them