Header Ads



மைத்திரியுடனான சந்திப்பில் றிசாத்தும், ஹக்கீமும் பேசியது என்ன..?

-அன்ஸிர்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போது பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸ பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு நல்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

தாம் மகிந்தவை பிரதமராக்கியதன் நோக்கத்தையும், மைத்திரிபால  2 முஸ்லிம் கட்சித் தலைவர்களிடத்திலும்  தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து மைத்திரியிடம் ஹக்கீமும், றிசாத்தும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக இந்த 2 முஸ்லிம் கட்சித் தலைவர்களும் தமக்கு அமைச்சுப் பதவி முக்கியமல்ல என வலியுறுத்தியுள்ளதுடன், தமக்கு முஸ்லிம் சமூகத்தின் நலன்களும், நாட்டு நலனுமே முக்கியம் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தமை, முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை அவருக்கு பெற்றுத்தந்தமை, அவரது அமைச்சரவையில் செயற்பட்டமை போன்றவற்றையும் தெளிவுபடுத்தினர்.

அத்துடன் எந்தவொரு  தீர்மானத்தையும், தம்மால் தனித்து மேற்கொள்ள முடியாதெனவும் தமது சமூகத்துடன் இதுகுறித்து கலந்துரையாட வேண்டுமெனவும், முஸ்லிம் அமைப்புகளிடம் பேச வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தற்போதுள்ள அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பட பாராளுமன்றம் கூட்டப்படுவதுடன், இந்த நெருக்கடி நிலையானது எந்தவைகயிலும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடாதெனவும், நாட்டில் நிலையான சமாதானமே தமது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளனர்

8 comments:

  1. ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன் பின்பு தான் நாம் இருவரும் உங்களுடன் சேர்ந்தோம் என்று சொல்லியிருக்கலாம்.

    அப்போதாவது உங்களால் ஒன்றும் பண்ண முடியாது, முஸ்லீம் மக்களின் முடிவு தான் எங்கள் முடிவு என்பதை அவரு புரிந்து கொள்வார்.

    ReplyDelete
  2. ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன் பின்பு தான் நாம் இருவரும் உங்களுடன் சேர்ந்தோம் என்று சொல்லியிருக்கலாம்.

    அப்போதாவது உங்களால் ஒன்றும் பண்ண முடியாது, முஸ்லீம் மக்களின் முடிவு தான் எங்கள் முடிவு என்பதை அவரு புரிந்து கொள்வார்.

    ReplyDelete
  3. விரைவில் முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை அறிவிப்பார்கள். இபோதைய நிலையில் அதுதான் சரியான தீர்மானம். நாம் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் இன்னொரு தேர்தல் நடந்தால் மஹிந்த தான் இந்த நாட்டின் பிரதமர்.

    ReplyDelete
  4. தேர்தல் நடந்தால் எப்படியும் மஹிந்த ஆட்சிதான் வரப்போகின்றது. தேர்தலுக்கு பின்னர் மகிந்தவிடம் எப்படியும் போய் ஒட்டிக்கொள்ளத்தான் போகின்றார்கள் இந்த இரண்டு கட்சிகளும். அப்பொழுது போய் வெட்கமில்லாமல் இருப்பதை விட, இப்பொழுதே போவது மரியாதையான விடயம்.

    ReplyDelete
  5. மஹிந்த பக்கத்திற்கு போவார்கள் ,போகத்தான் வேண்டும்.

    ReplyDelete
  6. அரசியல் நிலைமையை அவதானிககும்போது மகிந்தவுடன் இணைவதே சரியான முடிவும் காலத்தின் தேவையும் ஆகும்.

    ReplyDelete
  7. முஸ்லிம்களுக்கு உண்மையில் எது நல்லதோ, அதனை செய்யும் உரிமையும், தேவையும் முஸ்லிம் தலைமைகளுக்கு உள்ளது. வெறும் உணர்ச்சி அரசியலால் பயனில்லை. தமிழ் சமூகம் ஏமாற்றப்படுவது போல் முஸ்லிம்களும் ஏமாறத் தேவையில்லை.

    ReplyDelete
  8. முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி ஒழுங்கான தீர்க்கமான முடிவை எடுப்பது சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.