அரபு நாடுகளுடனான முரண்பாடுகள் தொடர்பில் கவலையடைகிறேன், எனினும் பொருளாதாரம் முன்னேறியுள்ளது - கட்டார் அமீர்
ஏனைய அரபு நாடுகளுடனான முரண்பாடுகள் தொடர்வது தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்துள்ள கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்தானி, எனினும் அந்த நெருக்கடிகள் கடந்து போகும். கடந்த வருடம் எமது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
உலகின் முதலாவது திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நாடு என்ற பெயரைத் தக்க வைப்பதற்காக தமது நாடு தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுக் கைத்தொழிலை விருத்தி செய்யும் எனவும் அரபு நாடுகளின் ஷூறா சபைக் கூட்டத்தில் தமீம் தெரிவித்தார்.
கட்டாரின் ஏற்றுமதிகள் கடந்த வருடம் 18 வீதத்தினால் அதிகரித்ததாகவும் செலவுகள் 20 வீதத்தினால் குறைவடைந்ததாகவும் தமீம் மேலும் தெரிவித்தார்.
டோஹா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் அங்கத்தவர்களுடன் 2014 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினை மீறியதாகவும் குற்றம்சாட்டி கடந்த 2017 ஜூன் மாதம் 05 ஆந் திகதி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தமது கட்டாருடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களை தடை செய்ததன் மூலம் துண்டித்தன.
எனினும் கட்டார் இந் நான்கு நாடுகளினதும் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறது. பிளவு ஆரம்பித்தது தொடக்கம் கட்டார் நாணயத்தின் பெறுமதி பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதோடு அண்டை நாடுகளினால் விதிக்கப்பட்ட தடைகளின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் தமீம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் தொடர்பில் பேசிய தமீம் வளைகுடா நாடுகளை பலவீனப்படுத்துவது பிராந்தியப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எமது பலவீனப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
-Vidivelli
Post a Comment