Header Ads



ஜனாதிபதியை நோக்கி, பாலித்த தெவரப்பெருமவின் அதிரடிக் கேள்வி

பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போனதாக தெரிவித்துள்ள ஜனாதிபதிக்கு, அவர்களின் விலை எவ்வாறு தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு நேற்று நட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாலித்த தெவரப்பெரும இதனை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது எனவும் இதுவே பாராளுமன்றத்தைக் கலைக்க முக்கிய காரணமாகியது எனவும் ஜனாதிபதி நேற்று தனது விசேட உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

“அவ்வாறு அந்த விலைகள் ஜனாதிபதிக்கு தெரியும் எனின், ஜனாதிபதியா இந்த விலைகளை நிர்ணயித்தார்?” எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியினால் சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமாராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பல கட்சி தவல்கள் இடம்பெற்றன. இந்த கட்சி தவல்களுக்கு பின்னால் பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதியின் உறையும் அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது

-Dc-

No comments

Powered by Blogger.