ரணில் விக்கிரமசிங்கவை நான்தான், மிக மோசமாக திட்டி உள்ளேன் - அதாவுல்லா
விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி என்பதை மிக நன்றாக அறிந்து வைத்திருந்தார் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பி வந்த இவர் ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே இவ்வாறு கூறினார்.
இவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு,
நான் ஒரு நபரை மிக மிக அதிகமாக திட்டி இருக்கின்றேன் என்றால் அது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஆகும். ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டின் மீது எவ்வித அக்கறையும் கிடையாது. நாட்டு மக்கள் மீது எவ்வித கரிசனையும் கிடையாது. மேற்குலகத்தின் நலன் சார்ந்த விடயங்களில் மாத்திரமே அவரின் கவனம் இருந்து வருகின்றது. நாட்டு மக்களுக்கு இடையில் வேண்டும் என்று திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி மோத விட்டு அதில் குளிர் காய்பவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க சாரதியாக உள்ள வரை ஐக்கிய தேசிய கட்சி என்கிற வாகனத்தில் ஏற மாட்டார் என்று எமது பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் தெரிவித்து உள்ளார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் சுயநல முஸ்லிம் அரசியல் தலைமைகள் ரணில் விக்கிரமசிங்கவின் செல்ல பிள்ளைகளாகவும், எடுப்பார் கை பிள்ளைகளாகவும் இருந்து இயங்கி வருவதை கண்கூடாக காண முடிகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவை நான்தான் மிக மோசமாக திட்டி உள்ளேன் என்று இது வரை காலமும் நம்பி இருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை அண்மையில் பொய்த்து விட்டது. ஏனென்றால் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் மிக மோசமாக ரணில் விக்கிரமசிங்கவை திட்டி தீர்த்து உள்ளதை காணொளிகள் மூலமாக கடந்த நாட்களில் பார்த்து பிரமித்து போனேன். ரணில் விக்கிரமசிங்க மாபெரும் குள்ள நரி என்பதை பாலசிங்கம் மிக நன்றாக அறிந்து வைத்து இருந்துள்ளார்.
விடுதலை புலிகளின் போராட்டம் வழி தவறி போனதற்கு அமெரிக்காவே காரணம் ஆகும். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தம் உண்மையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த யுத்தமே ஆகும். எமது நாடு அமைதி பூங்காவாக விளங்குவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. அமெரிக்காவின் நலன்களை முன்னெடுப்பவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்த கால பகுதியில் எமது நாடு காலனின் பிடியில் சிக்கி இருந்தது. அது இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சாபம் பிடித்த காலமாகவும் விளங்கியது. ஆகவேதான் நாம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத புதிய அரசாங்கத்தை உருவாக்க அவர் பிரதமரான நாள் தொட்டு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டோம். அதை முன்னிறுத்தியே பாலமுனை பிரகடனத்தை நிறைவேற்றினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பையும், இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் ஒன்றுபடுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒருமைப்படுத்தி பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இல்லாத ஆட்சி ஒன்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்து வெற்றி கண்டு உள்ளோம். பாலமுனை பிரகடனத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றன.
இந்நாடு வனப்பும், செழிப்பும் நிறைந்தது. இந்நாட்டு மக்கள் அனைவரும் நல்லவர்கள். இலங்கையர் என்கிற தேச பற்றுடன் நாம் எல்லோரும் வாழ்கின்ற நற்காலம் முகிழ்க்க வேண்டும். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ள முடியும். வெளி சக்திகளை இதில் தலையிட இடம் கொடுக்க முடியாது. மூன்று இனங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள் ஒன்றாக ஒரு மேசையில் கூடி பேசி அரசியல் தீர்வுக்கான குறிப்பாக அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை எட்ட முடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதற்கான செயல் திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
(எஸ்.அஷ்ரப்கான்)
Another mango
ReplyDeleteஇரு பெரும் முஸ்லிம் தலைவர்கள் ரணிலை கைவிட்டு மகிந்தவுடன் சரணாகதி?
ReplyDeleteமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் இன்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைளிப்பதாக றிசாட் பதியுதீன் தெரிவித்திருந்த நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததோடு, புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியைப் பெறுவதற்கும் முயற்சித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.
இந்த செய்திக்குப் பின்னரே, ஜனாதிபதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவரின் போட்டிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் சமகால அரசியல் குறித்து நேற்றைய தினம் பேசியதாக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதும், இந்த சந்திப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் எந்தத் தரப்பிலிருந்தும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதியைச் சந்தித்தமையினை அடுத்து, மகிந்த ராஜபக்ஷவுக்கு இவர்கள் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டினை எடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதேவேளை, ரணில் விக்கரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதுவரை மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
With compliments from:
Noor Nizam.
Convener - "The Muslim Voice"
இது என்னடா புது கதை.. ஆட்டச்சி மாற்றம் இவரால் தானா ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்திற்க்கு இவரின் பாலமுனை பிரகடனம் தான் காரணமாம். 2002 காலப்பகுதியில் இவர் கல்வி பிரதி அமைச்சாராக இருந்த போது ஐதேக ன் தலவராக யாரு இருந்தார் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்.. இன்னும் எவ்வளவு காலத்திற்க்கு இவ்வாறு பஸ் கதை கதைக்கப் போகிறார்....
ReplyDeleteஇது பெரிய சாதனையா நீ சரியான குடிகாரன் போதையில் கத்தி இருப்பாய் என்று ரணில் நன்றாக அறிந்து இருப்பார்
ReplyDeleteYou and Ashraff destroyed Srilankan Muslims day to day life by bringing communal politics and paved the way to emerge anti Muslim,anti minority,BBS,Ravana Balay, Hela Urumaya and Sinhale.
ReplyDeleteYes your leader gone against Ranil and resuscitated anti Muslim anti minority SLFP party.Even small Children knows the SLfP is formed on the basis of anti minority policy.But you and your leader did not know.For your leader's help to Chandrika, She gave good present that is Mavenella attack. All the attack on Muslims happened in your SLFP government.Even Digana attack is complete plan of Maithree of SLFP.E-News lanka gave full details of President involvement in Digana.
Had not Ashraff supported Chandrika,SLFP anti Muslim Government would have defeated. But your leader stole Muslim UNP votes in the name Muslim congress and turned it to be a SLFP votes and Gone for money and Minister post forgetting Muslims as now a days politicians jumping for money and post. If any body going for money and post forgetting country is traitor, not a patriotic politicians.Thats what did you and your leader. But why your party cannot act as Tamil politicians doing.They are not after money and post but their aim is the well being of their people. Now MPs are for sale, what a joke,What a great country.
Speak the truth dont bluff
ReplyDeletefear allah .
may allah protect all of us
All of u r waste for the community and lanka..
ReplyDeleteU never shame that they r buying the MPs..?
What is the dirty u people have in ur mind..?
Is this good for a loving country..? u people need only KASU KASU KASU...Loosuppayalugal..poi umma kududa peya..!
நீங்கள் தமிழில் திட்டியது அவருக்கு விளங்கவில்லை. ரணிலின் பவர் குறைந்த பின்தான் இந்த வீர வசனம்.
ReplyDelete