Header Ads



துரோகியினால் கொலை செய்யப்பட்ட, சு.க. க்கு ஆழ்ந்த இரங்கல் - மங்களவின் பரபரப்பு டுவிட்டர் பதிவு

துரோகியினால் காட்டிக் கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவரின் டுவிட்டர் பக்கத்தில் இன்று -11- அவர் இதனை தெரிவித்துள்ளார். ரெஸ்ட் இன் பீஸ் ஸ்ரீலங்கா ப்ரீடொம் பார்ட்டி என கூறியுள்ளார்.

இதேவேளை, தோற்றம் 1951 எனவும், மறைவு 2018ஆம் ஆண்டு எனவும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ, அனுர மற்றும் சந்திரிக்காவின் அன்பான கட்சி மைத்திரிபால சிறிசேன என்னும் துரோகியினால் காட்டிக் கொடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது என்றும் அந்த இரங்கல் செய்தியில் மங்கள கடுமையாக தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. yes. well statement. that has been happened.

    ReplyDelete
  2. My condolences to SLFP.The distroyer My 3for this sin he will be punished

    ReplyDelete

Powered by Blogger.